இந்த பதிவில் “நான் ஒரு தொழிலதிபர் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
மற்றவர்களுக்கு உதவி செய்து பிறர் அடையும் இன்பத்தை காணும் போது கிடைக்கும் சந்தோசம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. என்னால் முடிந்த உதவிகளை எளிய மக்களுக்கு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.
நான் ஒரு தொழிலதிபர் ஆனால் கட்டுரை – 1
இன்றைய சமுதாயத்தில் வெறுமனே கடுமையாக உழைப்பதனால் மட்டும் முன்னேறி விட முடியாது. உழைக்கின்றதோடு நின்று விடாமல் சேமிப்பும் சிறந்த முதலீடும் முகாமைத்துவமும் உடையவர்களாக இருந்தால் மாத்திரமே உயர்ந்த நிலையை அடைய முடியும்.
அந்த வகையில் ஒரு சிறந்த தொழில் அதிபராக நான் ஆனால் இந்த சமூகத்தில் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் துன்பப்படுகின்ற இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் படியான தொழில் முயற்சிகளில் ஈடுபடுவேன்.
எனக்கு என்னை போலவே இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்பது எனது விருப்பமாகும். சமத்துவம் என்ற விடயம் இங்கு உருவானால் தான் எமது சமூகம் முன்னோக்கி பயணிக்க முடியும்.
எங்களுடைய பிரதேசங்களில் ஏராளமான வளவாய்ப்புக்கள் மலிந்து காணப்படுகின்றன. அத்துடன் இங்கு அதிகளவான தொழிலாளர் வளமும் காணப்படுகின்றது. ஆனால் இவை எதுவும் கண்டுகொள்ளப்படாமல் வீணாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நான் அவதானித்திருக்கின்றேன்.
எனவே நான் என்னிடம் இருக்கின்ற பணத்தை முதலீடு செய்து ஒரு பெரிய தொழிலதிபராக மாறி இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் உறுதுணையாக இருப்பேன்.
சில சாதாரண தொழிலாளர்களுடைய அன்றாட வாழ்க்கை எவ்வளவு துன்பமானது என்பதை நான் அறிவேன் அவர்களை போன்ற மக்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு நான் உதவி செய்வேன்.
ஒரு தொழிலதிபராக நான் மக்களிடம் வேலையினை மாத்திரம் வாங்கி சம்பளம் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல் அந்த மக்களின் எதிர்காலத்துக்காகவும் உதவி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு நான் ஒரு தொழிலதிபராக ஆனால் இந்த சமூகத்துக்காக பணியாற்றுவேன்.
நான் ஒரு தொழிலதிபர் ஆனால் கட்டுரை – 2
நினைத்த விடயங்களை சாதிக்க வேண்டுமானாலும் சரி உயர்வான கல்வி மற்றும் உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டுமானாலும் இந்த காலத்தில் திறமை என்பதனையும் தாண்டி பணம் மிகவும் அவசியமானதாக உள்ளது.
அந்த வகையில் நான் ஒரு தொழில் அதிபரானால் என்னை பணம் இல்லை என்ற காரணத்திற்காக புறக்கணித்தவர்களுக்கு மத்தியில் நான் ஒரு சிறந்த ஆளுமையாக உருவெடுப்பேன்.
நான் ஆசைப்பட்டு கிடைக்காமல் போன அனைத்து விடயங்களையும் சொந்தமாக வாங்குவேன். எனது குடும்பத்தவர்கள் நண்பர்கள் என அவர்கள் செய்ய ஆசைப்படுகின்ற விடயங்களையும் நான் சாத்தியமாக்கி காட்டுவேன்.
ஏன் என்றால் பணத்தால் இங்கு சாத்தியமாக கூடிய விடயங்கள் நிறையவே உள்ளன. அவ்வாறு நான் எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் மட்டும் உதவி செய்வதோடு மட்டும் நின்று விடாமல் இந்த சமூகத்தில் இருக்கின்ற ஏழைகளுக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் மாணவர்கள் முதியவர்கள் போன்றவர்களை பாதுகாக்க நான் நடவடிக்கை எடுப்பேன். வறுமையான நிலையிலும் முன்னேற வேண்டும் என்று துடிக்கின்ற இளைஞர்களுக்கு உதவி செய்து அவர்களை வெற்றி பெற செய்வேன்.
எனது தொழில்களை மேலும் விரிவுபடுத்தி இன்னும் அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை கிடைக்க செய்வேன். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பதல்” என்ற உயரிய அறத்தின் பால் இங்கே உள்ள அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.
அவ்வாறே எனக்கு பிடித்தது போல மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த வாழ்வினை நான் வாழ்வேன். யாருக்கும் அஞ்சாது அடிமைப்படாது அடுத்தவர்களுக்கும் உதவி செய்து வாழ்கின்ற இந்த வாழ்வு எனக்கு கிடைத்தால் அது வரமாகும்.
You May Also Like: