சுனாமி பற்றிய கட்டுரை

tsunami katturai in tamil

இந்த பதிவில் பெரும் இயற்கை அனர்த்தங்களின் ஒன்றான “சுனாமி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

சுனாமி தாக்கி பல வருடங்கள் கடந்த நிலையிலும், அதன் தாக்கமும் அது ஏற்படுத்திய வலியும் என்றும் மக்களை விட்டு நீங்கவில்லை என்பதே உண்மை ஆகும்.

சுனாமி பற்றிய கட்டுரை

சுனாமி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுனாமி உருவான விதம்
  3. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள்
  4. 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தாக்கிய ஆழிப்பேரலை
  5. சுனாமிப் பாதுகாப்பு
  6. முடிவுரை

முன்னுரை

பல தலைமுறையாக உலகம் கண்டிராத சோகம் கடல் அலைகளின் வழியாக வந்தது. இயற்கையின் பேராற்றலுக்கு முன்பு மனிதகுலம் மண்டியிட்ட ஓர் நாளாகவே 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி காணப்பட்டது.

இந்த துயரச் செய்தியை எளிதில் யாராலும் மறக்க முடியாது. துயரச் செய்தியுடன்தான் பெரும்பாலானோர் கண் விழித்திருப்பர்.

ஆசியாவில் பெரும் பகுதியைத் தாக்கி 2 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்களை பலிகொண்ட துயர பேரலையாக சுனாமிப் பேரலை அமைந்தது.

சுனாமி உருவான விதம்

இந்தியா அவுஸ்திரேலியா தட்டிற்கிடையில் நகர்வுகள் ஏற்பட்டு சுமாத்திரா, அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவில் 9.3 ஆக அந்த அதிர்வு கணிக்கப்பட்டது.

அப்படியொரு பெரும் அதிர்வு அதற்கு முன்பு பதிவாகியிருக்கவில்லை. இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் சுமாத்ரா தீவிற்கு 400KM நீளமும், 100KM அகலமும் கொண்ட பிளவு ஒன்று டெக்டோனிக் தட்டுகளுக்கு இடையில் உருவானதே சுனாமிக்கு காரணம் என கூறப்பட்டது.

நீருக்கு அடியில் ஏற்பட்ட சிதைவினால் உண்டான நீர்மட்ட மாற்றத்தின் விளைவாக வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு பெரிய அலைகள் உருவாகின.

அந்த அலைகள் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, அந்தமான், நிக்கோபார் தீவுகள், மாலைதீவு, கிழக்கு ஆபிரிக்கா என சுற்றியிருந்த நிலப்பரப்புகளை தாக்கின.

சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள்

உயிர் பிழைக்க ஓடியவர்கள் பலர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி மற்றும் அலைகளில் சிக்கி மூச்சுவிடாமல் பலர் மரணமடைந்தனர்.

நொடிப்பொழுதில் பலரது வாழ்க்கை நிர்கதியாகியது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியாகினர். படகுகள், வலைகள் அறுக்கப்பட்டதோடு மீனவ சமூகத்தின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்தது.

சுனாமிப் பாதுகாப்பு

உடமைகளை பாதுகாக்க காத்திருக்காமல் அங்கிருந்து விரைவாக வெளியேற வேண்டும்.

சுனாமி எச்சரிக்கை மையங்களிலிருந்து தகவல் பெற உள்ளூர் ரேடியோ அல்லது தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து அல்லது வானிலை அறிக்கைகளை கேட்டு பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும்.

முடிவுரை

இயற்கை அனர்த்தங்கள் என்பது மனிதனின் சக்திக்கப்பாற்பட்டது. இயற்கையோடு போட்டி போடுவதை நிறுத்திவிட்டு தனது மக்களின் உயிருக்கு முக்கியத்துவம் அளிக்காத ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வடிவங்களில் எதிர்காலத்தில் தொடர்ந்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சுனாமி தாக்கி பல வருடங்கள் கடந்த நிலையிலும், அதன் தாக்கமும் அது ஏற்படுத்திய வலியும் என்றும் மக்களை விட்டு நீங்கவில்லை என்பதே நிதர்சனம்.

You May Also Like :
பேரிடர் மேலாண்மை கட்டுரை
இயற்கை பேரிடர் கட்டுரை