இந்த பதிவில் “கொரோனாவும் கல்வியும் கட்டுரை” பதிவை காணலம்.
இலகுவாக பரவக்கூடிய கொரோனா பெரும் தொற்றால் பல துறைகளும் முடங்கியது. அதில் கல்வி துறையும் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
கொரோனாவும் கல்வியும் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- கொரோனாக் காலத்தில் கல்வித்துறையின் நிலை
- இணையவழிக் கல்வியின் சிறப்புகள்
- கொரோனா கால கல்விச் சிக்கல்கள்
- தீர்வுகள்
- முடிவுரை
முன்னுரை
இயற்கை மனிதனை வாழ வைக்கின்றது. அதே இயற்கை தான் சில சமயங்களில் மனித உயிர் மற்றும் உடமைகள் அழிவிற்கும் காரணமாகின்றது. இயற்கை மனிதனை விடப் பலம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் தெளிவுபடுகின்றது.
கொரோனா வைரஸ் ஆனது உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்கள்⸴ அரச அலுவலகங்கள்⸴ பொதுத்துறை நிறுவனங்கள்⸴ சுற்றுலாத்தலங்கள் என அனைத்தும் ஆட்டம் கண்டுள்ளது.
இதனால் மக்கள் வாழ்வியலிலும்⸴ பொருளாதாரத்திலும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில் மாணவர்களுக்கு இணையவழிக் கற்கையானது தவிர்க்க முடியாத ஒன்றாக உணரப்படுகின்றது. இக்கட்டுரையில் இது பற்றிக் காண்போம்.
கொரோனாக் காலத்தில் கல்வித்துறையின் நிலை
கற்றல்⸴ கற்பித்தல் என்ற இரண்டும் கல்வியில் முக்கியமானதாகும். இதை நேரடி வகுப்பறையில் ஆசிரியரும்⸴ மாணவரும் இணைந்து செயற்படுத்துவர். ஆனால் கொரோனாவால் இந்நிலை இணையவழியில் கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அறிதிறன் பேசி (ஸ்மார்ட்போன்)⸴ கணினி⸴ மடிக்கணினி முதலான தொழில்நுட்ப கருவிகள் கல்வியில் பெரிதும் துணைபுரிகின்றன. பள்ளி முதல் கல்லூரி⸴ பல்கலைக்கழகங்கள் வரை இணையத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
பாடத் திட்டங்களுக்கு ஏற்ப கற்கைநெறி ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான நுழைவு அனுமதி உள்ளிட்ட அனைத்துக் கல்விசார் நிர்வாக நடவடிக்கைகளும் இணைய வழியிலேயே இடம்பெறுகின்றது.
பொது முடக்கத்தில் கல்வி நடவடிக்கைகளை சீராக மேற்கொள்வதற்கு இது தேவைப்பாடானதாகும்.
இணையவழிக் கல்வியின் சிறப்புகள்
இருந்த இடத்தில் இருந்தவாறே கல்வி கற்கவும்⸴ மாணவர்கள் உரிய நேரத்தில் இணையவழிக் கற்கையில் இணைந்து கொள்ளவும் உதவுகின்றது. கற்றல் திறனையும்⸴ அறிவுத் திறனையும் வளர்க்க இணையவழிக் கற்கை துணைபுரிகின்றது.
இன்றைய சூழலுக்கு ஏற்றதாகவும் தேவைப்பாடான ஒன்றாகவும் உள்ளது. கல்வியைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதற்கு சிறந்த வழியாகவுள்ளது.
கொரோனா கால கல்விச் சிக்கல்கள்
இணைய வழி என்பதால் தொழில்நுட்பக் கருவி மூலம் பல சிக்கல்கள் எழுகின்றன. கைபேசி முதலானவை நீண்ட நேர வகுப்புகளால் வெப்பம் அடைகின்றன. இதேபோல் மாணவர்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
தலைவலி⸴ கண் நோய்⸴ மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. அலைபேசி அனைவரிடமும் இருப்பதில்லை. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். கைபேசியை அதிக நேரம் மாணவர்கள் பயன்படுத்துவதால் தவறாக அதனைப் பயன்படுத்தவும் முற்படுகின்றனர்.
தீர்வுகள்
ஒரே நேரத்தில் பல பாடங்களை தொடர்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் கண்ணாடி அணிதல் அவசியம் ஆகும். இதன் மூலம் தலைவலி⸴ கண் பாதிப்பு முதலானவையைப் பெருமளவில் தவிர்க்கலாம்.
கல்வியாளர்களை கொண்டு அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இணையவழிக் கற்கையைத் தொடரலாம். மாணவர்களின் கல்வி சார் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கவனத்தில் எடுத்து கண்காணிப்பது அவசியம்.
முடிவுரை
கல்வியின் உயர்வே ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாகும். இன்றைய சூழலில் இணையவழி கற்கைத் தேவைப்பாடானது தவிர்க்க முடியாததாகும்.
எனினும் அதனால் ஏற்படும் தாகமும் தவிர்க்க முடியாததாகும். எனவே காலச் சூழலைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப நாம் செயற்படுதல் அவசியமாகும்.
You May Also Like: