தன் சிந்தனைகளால் காலங்களை கடந்து வாழும் கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் சிலவற்றை பார்க்கலாம்.
உலகில் மாபெரும் சிந்தனையாளர்கள் பட்டியலில் கார்ல் மார்க்ஸ்க்கு தனி இடம் உண்டு. உலகில் மார்க்சியம் ஏற்படுத்திய தாக்கம் அளப்பெரியது.
ரஷ்ய புரட்சி, கியூப புரட்சி, சீன புரட்சி, வியட்னாம் புரட்சி என்பவற்றில் கார்ல் மார்க்ஸின் மார்க்சிய கோட்பாடுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின.
வரலாற்றில் கார்ல் மார்க்ஸ்க்கு என்றும் தனி இடம் உண்டு.
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்
மதம் மனிதனை
உருவாக்கவில்லை..
மனிதன் தான் மதத்தினை
உருவாக்கினான்.
ஒருவன் தனக்காக தன்
வாழ்க்கைக்காக
உழைக்கும் போது மனிதனாகிறான்
ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக
வாழும்போது அவன் உண்மையான
மனிதனாகிறான்.
மாற்றம் என்பது
மானுட தத்துவம் மாறாது
என்ற சொல்லை தவிர
மற்றவை அனைத்தும்
மாறிவிடும்.
அன்பு நிறைந்த பெண்ணிடம்
காதல் கொள்வது என்பது
ஒரு மனிதனை மறுபடியும்
மனிதனாக்குகிறது.
பிறக்கும் குழந்தைகள்
அனைத்தும் உண்ணும்
வயிற்றுடன் மட்டும் பிறக்கவில்லை..
உழைக்கும் இரண்டு
கைகளுடனும் தான் பிறக்கின்றன.
மக்களை மகிழ்ச்சி அடைய
செய்யும் மனிதன் தான்
மகிழ்ச்சிகரமான மனிதன் என்று
வரலாறு வரவேற்கிறது.
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக
இருப்பதற்கு முதலில் மதங்களை
இல்லாது ஒழிக்க வேண்டும்.
மாற்றங்கள் என்பதை
நிச்சயம் தவிர்க்க முடியாது..
மாற்றங்களை எதிர்கொள்ள
மனஉறுதி வேண்டும்.
முதலாளித்துவ சமூகத்தில்
பணத்திற்கு மதிப்பிருக்கும்
ஆனால் அதை நம்பி இருக்கும்
மனிதர்களுக்கு மதிப்பு
இருக்காது.
மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..