இந்த பதிவில் “ஆசிரியர் கவிதைகள் வரிகள்” காணலாம்.
- ஆசிரியர் கவிதை வரிகள்
- ஆசிரியர் கவிதைகள்
- Aasiriyar Kavithaigal In Tamil
ஆசிரியர் கவிதைகள் வரிகள்
1.நமக்கு உலகை காட்ட நம்மை
செதுக்கியவள் தாய்..
உலகிற்கு நம்மை காட்ட
செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.!
2. அன்புள்ள ஆசிரியரே என்னில்
நம்பிக்கையை தூண்டியதற்கு நன்றி..
என் கற்பனையை பற்ற வைக்கிறது..
என்னுள் ஊடுருவி.. கற்றல் ஒரு காதல்.!
3. பல நேரங்களில் மாணவர்களாகவும்
சில நேரங்களில் ஆசிரியர்களாகவும்
இருக்கும் அனைவருக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!
4. யாரிடம் கற்றுக் கொள்கிறமோ
அவரே ஆசிரியர்.. போதிப்பவர்கள்
எல்லோரும் ஆசிரியர்கள் அல்ல.
5. கல்விக் கூடம் ஒரு தோட்டம்..
மாணவர்கள் செடிகள்..
ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.!
6. எதை நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ள
வேண்டி இருக்கிறதோ..
அதை அதிகம் மற்றவர்களுக்கு
கற்றுக் கொடுங்கள்.
7. கற்பித்தல் மூலமே சிறப்பாக
கற்றுக்கொள்ள முடியும்.
8. இரண்டு விதமான ஆசிரியர்கள்
உள்ளனர்..
ஒருவர் எப்படி பிழைப்பு நடத்துவது
என்று கற்றுக்கொடுக்கிறார்..
சிறந்த ஆசிரியர் எப்படி வாழ்வது என்று
கற்றுக்கொடுக்கிறார்.
9. எந்த ஆசிரியர் தான் எழுதிய
புத்தகத்தைப் பற்றி மிகவும்
பெருமையாக பேசுகிறாரே..
அவர் தனது மோசமான மகனை
அதிகமாக பாராட்டும் தாய்க்கு சமம்.
10. பாம்பின் ஒவ்வொரு அசைவையும்
துல்லியமாக நீங்கள் கவனிப்பதை
போன்று..
பாடத்தையும் கவனியுங்கள்..
முழு கவனத்தையும் செலுத்துங்கள்..
பாடம் கற்பிக்கும் போதே
மனதில் பதியும்.
11. ஒளிரும் விளக்கை மற்றவர்களுக்கு
கொடுப்பது போல் ஆசிரியர்கள்
இருக்கிறார்கள்.
12. குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோர்
பெற்றோர்களையும் விட..
பெரும் மதிப்புக்கு உரியவர்கள்.
13. அறிவை மற்றவர்களுக்கு ஆனந்தமாக
போதிக்க கற்றவனே
சிறந்த ஆசிரியர்.
Aasiriyar Kavithaigal In Tamil
14. குருவின் அருளால் சீடன் நூல்கள்
இன்றியே அறிஞன் ஆகின்றான்.
15. நமக்கு கற்பிப்பவர்கள் எல்லாம்
ஆசிரியர்கள் அல்ல..
யாரிடம் நாம் கற்றுக்கொள்கிறமோ
அவரே நமக்கு ஆசிரியர்.
16. இன்றைய மாணவர்கள் நாளைய
தூண்கள்..
அந்த தூண்களை வடிவமைப்பது
ஆசிரியர்கள் தான்.
17. ஒரு மாணவனின் வளர்ச்சி..
மாணவனின் சிந்தனைகள்..
மாணவனின் பழக்கங்கள்..
ஒரு குடும்பத்தின் கனவுகள்..
ஒரு நாட்டின் வலிமை..
ஆசிரியர்களின் கைகளில் தான்
இருக்கிறது.
18. ஆசிரியர் பிரம்பால் அடித்ததும்..
திட்டியதும் வலித்தாலும்..
அதன் பலன்கள் எதிர்காலத்தில்
புரியும்.
19. தவறான எண்ணங்களை நீக்கி
நல்வழிப்படுத்தி..
பெற்றோருக்கும் மேலான
கடமைகளை செய்கிறார்கள்
ஆசிரியர்கள்.
20. ஆசிரியர் என்றாலே நினைவுக்கு
வருவது..
எளிமை, பாடம் நடத்தும் விதம்,
கலகலப்பான பேச்சு, கோபம்.
21. தங்கள் சிவப்பு மை பேனாக்களால்
எங்கள் தலை எழுத்தை திருத்தும்
பிரம்மாக்கள் ஆசிரியர்கள்.
22. சொல் உளி கொண்டு
எங்கள் உள் ஒளி செதுக்கிய
சிற்பிகளே ஆசிரியர்கள்.
23. எங்கள் அறிவு தாகம் தீர்க்கும்
அருவிகளே ஆசிரியர்கள்.
24. அறிவினை வரையறையின்றி
மாணவர்களுக்கு வாரி இறைக்கும்
கார்மேகங்கள் ஆசிரியர்கள்.
25. வாழ்க்கை எனும் ஏணியில்
மேல் ஏற தோள் தந்த ஏணிப்படிகள்
ஆசிரியர்கள்.
26. எங்கள் மூளையில் ஆணியாய்
அடிக்கப்பட்ட அறிவு..
தீபமாய் ஏற்றப்பட்டது
ஆசிரியர்களினால் தான்.