இந்த பதிவில் விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை பதிவை காணலாம்.
இந்திய நாட்டை செழிப்பான இந்தியாவாக மாற்ற நினைத்தால் முதலில் லஞ்சம் ஊழல் அற்ற நேர்மையான அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும்.
இளம் தலைமுறையினர் நினைத்தால் செழிப்பான இந்திய தேசத்தை உருவாக்க முடியும் என்று அப்துல்கலாம் அவர்கள் நம்பினார்.
- Vilipana India Katturai In Tamil
- Selipana India Katturai In Tamil
தூய்மை இந்தியா கட்டுரை
விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஓற்றுமையின் அவசியம்
- தனிமனித விழிப்புணர்வின் அவசியம்
- வளமான இந்தியா
- நேர்மையின் அவசியம்
- தற்போதைய சூழல்
- கையூட்டை ஒழித்தல்
- முடிவுரை
முன்னுரை
“ஈன்று புறந்தருதல் எந்தலை கடனே
சான்றோர் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல்வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே
நன்னடை நல்கல் வேந்தற்கு கடனே”
என்ற பொன்முடியாரின் வாக்கிற்கிணங்க நாம் நமது கடன்களை செவ்வனே செய்து செழிப்பான இந்தியாவை உருவாக்க வேண்டியது. ஒவ்வொரு இந்தியர்களின் கடமையாகும்.
நமது நாட்டில் நிலவி வரும் சீரற்ற நிலைப்பாட்டை மேம்படுத்த விழிப்புடன் நாம் செயற்பட வேண்டும். வளமான இந்தியாவை நாம் உருவாக்க வேண்டிய நடவடிக்கைகளை கட்டுரையில் நோக்கலாம்.
ஓற்றுமையின் அவசியம்
வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் இந்திய தேசத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்வோரை நாம் புறந்தள்ளவேண்டும்.
மாநிலங்களாலும் இனங்களாலும் மதங்களாலும் மொழிகளாலும் பிரிக்கப்பட்டாலும் மனங்களால் அனைவரும் ஒன்றுபடுவதன் மூலம் வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.
தியாக தலைவர்கள் காட்டிய நல்வழியில் அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்பதன் மூலமே செழிப்பான இந்தியாவை உருவாக்க முடியும்.
தனிமனித விழிப்புணர்வின் அவசியம்
நோயாளிகளை குணப்படுத்த வேண்டுமானால் முதலில் மருத்துவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். அது போல அடுத்தவர்களை திருத்துவதற்கு முன் நாம் சரியாக இருக்கிறோமா என்பது பற்றி யோசித்து பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதர்களும் தனி மனித விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியமாகும். இதனை வள்ளுவர் “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்கிறார்.
ஒவ்வொரு தனி மனிதர்களும் தாமாக உணர்ந்து சரியாக செயற்பட்டால் நாடு தானாக முன்னேற்றம் அடையும்.
வளமான இந்தியா
“ஒளிவு மறைவற்ற அரசாங்கமே ஊழலற்ற அரசாங்கம்” என கூறமுடியும். வளமான நாடானது அமையவேண்டுமாயின் ஊழல் லஞ்சம் அற்ற தூய்மையான அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் இருக்கும் பட்சத்தில் அந்த நாடு வளமான தேசமாக வளர்ச்சி காணும்.
ஆதலால் இன்றைய இந்தியாவில் தகுதியற்ற தலைவர்களும் மோசடி நிறைந்த ஆட்சியாளர்களினால் இந்தியா இன்றைக்கு ஏழைகள் அதிகம் வாழும் மாசுக்கள் அதிகம் காணப்படும் நாடாக மாறி வருகிறது.
எல்லா இயற்கை வளங்களையும் அதிக திறமையான இளைஞர்களையும் கொண்ட பலம் பொருந்திய இந்தியா விழிப்பற்ற மக்களின் செயற்பாட்டால் இன்றைக்கு பின்னடைவை சந்தித்து வருகிறது.
நேர்மையின் முக்கியத்துவம்
பொது வாழ்வில் நேர்மை மிக அவசியமானதாகும். அரசு துறைகளில் பணியாற்றும் கீழ்நிலை ஊழியர்களில் இருந்து அமைச்சர்கள் வரை அனைவருக்கும் நேர்மை மிக முக்கியமானதாகும்.
நேர்மையற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அதிகாரிகள் மீது நம்பிக்கையும் மரியாதையும் உருவாகும்.
இல்லா விடில் ஊழல் எங்கும் பரவி விடும். சமூகத்தில் ஊழல் செய்தால் தான் வாழமுடியும் என்ற நிலையானது உருவாகி விடும்.
தற்போதைய சூழல்
“அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்”
இன்று இந்தியாவில் மிகப்பெரிய அனர்த்தம் கொரோனாவாக உருக்கொண்டுள்ளது. மருத்துவ துறை இதற்கெதிராக கடுமையாக போராடி வருகிறது.
தனி நபர் சுகாதாரம், சமூக சுகாதாரம் இவற்றை அனைவரும் பேணி இந்த அனர்த்தத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதன் மூலமாக தான் நாளைய இந்தியாவை கட்டியமைக்க முடியும்.
கையூட்டை ஒழித்தல்
“லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” என்பதற்கிணங்க நாம் அனைவரும் செயற்பட வெண்டும். இந்தியாவில் லஞ்சம் ஒரு பாரிய பிரச்சனையாகும்.
அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. பணமோசடி தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய ஊழலுக்கெதிரான சட்டநடைமுறைகள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன.
இவற்றை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இலஞ்சத்தை முற்றாக ஒழிப்பதன் வாயிலாக இந்திய நாடு முன்னேற நிறைய வளவாய்ப்புகள் உள்ளது.
முடிவுரை
உலக வல்லரசுகள் வரிசையில் ஒரு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது “டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுடைய ஓரே கனவாகும்.
இதனை சாத்தியமாக்க அவர் நாளைய வருங்காலம் ஆன சிறுவர்களிடத்து அவர் கல்வியினால் இந்தியா தலை நிமிரும் என்று கற்பித்தார்.
கல்வியறிவினால் சமூகத்தில் நிகழும் தவறுகளை தடுக்கும் ஆற்றலும் எமது சமூகத்தை விழிப்புணர்வு அடைய செய்யவும் முடியும் இதன் வாயிலாக விழிப்பான செழிப்பான இந்திய தேசமானது உருவாகும்.
You May Also Like: