இந்த பதிவில் “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.
தலை சிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் இருந்த இவர் மக்களின் நலனுக்காக பாடுபட சிறந்த தலைவர் ஆவார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு
அறிமுகம்
மனிதருள் மாமனிதராக வாழ்ந்த மாபெரும் தேசியத் தலைவர் ஆவார். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்ˮ என்ற வரிகளுக்கு சொந்தக்காரன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.
ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தபோது விடுதலை வேட்கையோடு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு படையை திரட்டி அனுப்பிய பெருமைக்குச் சொந்தக்காரன் ஆவார்.
பெயர்: | முத்துராமலிங்கத் தேவர் |
வேறு பெயர்: | தெய்வத் திருமகன் |
பிறப்பு: | அக்டோபர் 30, 1908 (பசும்பொன்) |
தந்தை: | உக்கிரபாண்டி தேவர் |
தாய்: | இந்திராணி அம்மையார் |
பணி: | விவசாயம், அரசியல்வாதி |
இறப்பு: | 30 அக்டோபர், 1963 |
தொடக்க வாழ்க்கை
1908 அக்டோபர் 30 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் எனும் கிராமத்தைச் சார்ந்த உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். ஐமீந்தரான உக்கிரபாண்டிக்கு இவர் ஒரே வாரிசாவார்.
இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்புவதற்கு முன்னரே காலமானார். இதன் பின் சிறிது காலத்திலேயே தந்தை மறுமணம் செய்து கொண்டார்.
ஆனால் இரண்டாவது மனைவியும் இழந்ததன் காரணத்தினால் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் இதனால் முத்துராமலிங்க தேவர் உறவுக்கார பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்ற இடத்தில் வளர்ந்தார்.
இளமைப் பருவத்தில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்த குழந்தை சாமிப்பிள்ளை என்கின்ற குடும்ப நண்பரிடம் கல்வி பயின்றார். பின் ஆரம்பப்பள்ளிப் படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிஷன் அரசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். தனது பள்ளிப் படிப்பின் பின் தீவிர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அரசியல் ஈடுபாடு
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உருவாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து மதுரை⸴ இராமநாதபுரம்⸴ திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக இவர் முதன் முதலாக போராடினார்.
இவரின் அரசியல் பிரவேசத்தின் பின்புதான் இப்போராட்டம் உச்சம் அடைந்தது. இப்போராட்டத்தின் இவரின் தீவிர ஈடுபாட்டால் போராட்டம் வெற்றி பெற்றது. 1936ஆம் ஆண்டு பர்மாவிலிருந்து திரும்பியதும் அவர் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார்.
பின்னாளில் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் பலரை எதிர்த்து தனது வெற்றியைப் பெற்றார். இதன்பின் மாவட்ட வாரியாக தலைவருமான காங்கிரஸின் கொள்கைகளின் முரண்பட்டுக் கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தபடியே ACC INDIAN FORWARD BLOC எனும் இயக்கத்தைத் தொடங்கினார்.
இதன் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நியமிக்கப்பட்டார். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் இன்று மீண்டும் தீவிர அரசியலில் இறங்கிய முத்துராமலிங்க தேவர் அவர்கள் நேதாஜி என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
1952ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார்.
பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், பொதுத் தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும், முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார்.
இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். 1962 பொதுத்தேர்தலுக்கு மீண்டும் முன்னிறுத்தப்பட்ட மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த முத்துக்கள் வரலாற்று சிறப்புமிக்கது.
அதில் “நான் யாரையும் எதிரியாக கருதுபவன் அல்ல, தவறுகளை கண்டிக்கின்ற என்னை யாரேனும் எதிரியாக பாவித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் பேசுவது எழுதுவது சிந்திப்பது சேவை செய்வது என எல்லாமே நாட்டுக்காகவே அன்றி எனக்காக அல்ல” என்பனவாகும்.
முத்துராமலிங்க தேவரின் மறைவு
1962 தேர்தலில் வெற்றி வசமான போதிலும் உடல்நலக்குறைவால் நாடாளுமன்ற கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. மதுரையை அடுத்த திருநகரில் தங்கி ஓய்வும் சிகிச்சையும் பெற்று வந்தார்.
எனினும் உடல்நிலை மோசமாகியது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர் . ஆனால் 1963ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
முத்துராமலிங்கத் தேவர் அவரின் மரணத்திற்குப் பிறகு தனது உடலை சொந்த ஊரான பசும்பொன்னில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி மறுநாள் உடல் அங்கு கொண்டு செல்லப்பட்டு உடலுக்கு லட்சக்கணக்கிலான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் யோகிகள் அடக்கம் செய்யப்படும் முறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது .
பசும்பொன் முத்துராமமலிங்க தேவரின் கொள்கைகளை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ள உதவுவது “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்ˮ என்கிற அவரது முழக்கம் தான்.
கௌரவிப்புக்கள்
தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்துராமலிங்க தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். இதனாலேயே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, 2010ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், “முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும்” என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.
You May Also Like: