நவீன விவசாயம் பற்றிய கட்டுரை

இன்றைய நிலையில் விவசாயம் கட்டுரை

இந்த பதிவில் “நவீன விவசாயம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய நிலையில் விவசாயம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் துணையாக இருக்கிறது.

நவீன விவசாயம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விவசாயம் என்றால் என்ன?
  3. விவசாயத்தின் முக்கியத்துவம்
  4. விவசாயத்தில் தொழில்நுட்பம்
  5. நவீன விவசாயத்தில் தொழில் நுட்பத்தின் நன்மைகள்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். விவசாயம் உணவுக்கு மட்டுமல்லாது அதைச் சார்ந்த தொழிலுக்கும் உதவுகின்றது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்ததால் தான் பண்டைய காலம் தொடக்கம் இன்று வரை விவசாயத்திற்கு ஒவ்வொரு நாடுகளும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

விவசாயமானது பல கட்டங்களைத் தாண்டி இன்று நவீன விவசாய காலகட்டத்தில் சிறப்பு பெற்று வருகின்றது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக விவசாயத்தில் பல முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதனை நிவர்த்தி செய்வதற்கு விவசாயத்தில் தொழில்நுட்ப இயந்திரங்கள் மூலம் உற்பத்திகள் அதிகப்படுத்தப்படுகின்றன. நவீன விவசாயம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விவசாயம் என்றால் என்ன?

உழவுத் தொழில் அல்லது விவசாயம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சில வகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும்⸴ கால்நடை வளர்ப்பையும் குறிப்பதாகும். விவசாயம் ஒரு முக்கிய முதனிலைத் தொழில் ஆகும்.

இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த இயற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றுகின்றார்கள்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

“விவசாயி சேற்றில் கால்களை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்ˮ என்பது உண்மையான வரிகள் ஆகும். இதன் மூலம் விவசாயத்தின் முக்கியத்துவம் புலப்படுத்தப்படுகின்றது.

மனித குலத்தை வாழ வைக்க விவசாய முக்கியமானதாகும். மனித உயிர் வாழ்க்கைக்கு விவசாயம் இன்றியமையாததாகும்.

உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு விவசாயம் அவசியமாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயம் இன்றியமையாதது விளங்குகின்றது.

விவசாயத்தில் தொழில் நுட்பம்

விவசாயத்தில் நவீன தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாது விவசாயம் மேற்கொள்ளும் முறை கூட தொழில்நுட்ப வளர்ச்சியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பயிர்களுக்கு சரி விகித அளவில் சத்துக்கள் வழங்குவதற்கும் தொழில்நுட்பம் உதவுகின்றது. விதைகளை நாட்டவும்⸴ அறுவடை செய்யவும் மனிதவலு தேவைப்படுவதில்லை. இயந்திரங்கள் மூலம் விரைவாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

நவீன விவசாயத்தில் தொழில் நுட்பத்தின் நன்மைகள்

விவசாயத்தில் கூலி ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை முதலான சவால்களை நவீன தொழில்நுட்பம் மூலம் சமாளிக்கலாம்.

நிலத்தை உழுதல்⸴ வரம்பு அமைத்தல்⸴ நாற்று நடுதல்⸴ களை எடுத்தல் விவசாயக் கழிவுகளை உரமாக்குதல் முதலான பல செயற்பாடுகளை இயந்திரம் மூலம் விரைவாக செயல்படுத்தலாம்.

புதிய புதிய பயிர்களின் உருவாக்கம் தோன்றியுள்ளது. விளைச்சலை அதிகப்படுத்தலாம். உரம், மண் போன்றனவும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது.

முடிவுரை

பண்டைய காலம் முதல் வளர்ச்சி அடைந்து வருகின்ற விவசாயமானது இன்று நவீன விவசாய காலகட்டத்தில் சிறப்பு பெற்று வருகின்றது. விவசாயத்தை நவீன மயப்படுத்தி நவீன விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெற முடிகின்றது.

இன்று சனத்தொகைப் பெருக்கத்தினால் உற்பத்தி அதிகரிப்பு அவசியமாகின்றது. இதனை நவீன தொழில்நுட்பம் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபாகும். அதற்கிணங்க நவீன விவசாயம் சிறப்புப் பெறுகின்றது.

You May Also Like:

விவசாயம் பற்றிய பொன்மொழிகள்

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை