கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கட்டுரை தமிழ்

Coronavirus Vilipunarvu Katturai In Tamil

இந்த பதிவில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கட்டுரை தமிழ் பதிவை காணலாம்.

இன்று உலக மக்களே அச்சத்துடன் பார்க்கும் பேரிடராக தொற்று நோய்கள் இருக்கின்றன. இவை பல பாதிப்புக்களை ஏற்படுவதுடன் மரணத்தையும் ஏற்படுத்த கூடியதாக இருக்கின்றது.

  • கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கட்டுரை
  • Coronavirus Vilipunarvu Katturai In Tamil
உலக வெப்பமயமாதல் கட்டுரை

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கட்டுரை தமிழ்

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறிகுறிகள்
  3. மக்களின் செயற்பாடு
  4. விழிப்புணர்வு
  5. முடிவுரை

முன்னுரை

இன்று உலகினையே அச்சத்திற்குள்ளாகியிருக்கும் ஒரு கொடிய நோயாக வலம் வந்துகொண்டிருப்பது கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்று நோயாகும்.

இன்று இக்கொடிய தொற்றுநோய்க்கு சிறிய நாடுகள் மட்டுமல்லாது பல வல்லரசு நாடுகளும் தொற்று நோயினை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இவ்நோய்க்கு அண்மைக் காலங்களில் பல நாடுகள் தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தாலும் இந்த வைரஸ் குறைந்து செல்லும் போக்கு மிக அரிதாகவே காணப்படுகின்றது.

இந்த கொடிய தொற்று நோயினை முற்று முழுதாக அழிக்க முடியாவிட்டாலும் சில கட்டுப்பாடுகளின் மூலம் மக்களை விழிப்படையச் செய்து இந்த வைரஸின் பரவலை நாம் ஓரளவேனும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

அறிகுறிகள்

இந்த வைரஸ் பரவுதலின் ஆரம்பத்தில் பல அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால் தற்போது எவ்வித அறிகுறிகளும் இன்றி தானாகவே இவ் வைரஸ் தொற்று தென்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகையில் பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு என்பனவும் சிறிய அறிகுறிகளாக வயிற்றுகுடைவும் வலியும், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு, வெண்மை புள்ளிகள், தலைவலி, சுவை அல்லது வாசனை இழப்பு, தோல்கள் மீது சொறி ஏற்படுதல் என்பனவும் சிறிய அறிகுறிகளாக தென்படுகின்றன.

மிகத் தீவிர கடுமையான அறிகுறிகளாக சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல், மார்புவலி அல்லது அழுத்தம், பேசுவதில் சிரமம் போன்றன இவ் வைரஸின் அறிகுறிகளாக தென்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் செயற்பாடு

இவ்வைரஸ் தொற்று ஒரு நபரிடம் இருந்து இன்னும் ஒரு நபருக்கு தொற்றும் ஒரு வகை நோயாகும்.

ஆதலால் கொரோனா கால கதாநாயகர்களான வைத்தியர்கள், தாதியர்கள், இராணுவம், காவல்துறை, சுத்திகரிப்பு பணியாளர்கள் போன்றோர் தமது உயிரையும் துச்சமாக கொண்டு தமது பணியினை மேற்கொண்டு மக்களை கொடிய தொற்று நோயிலிருந்து காப்பாற்றி வருகின்றனர்.

ஆனால் மக்கள் அனைத்தினையும் பொருட்படுத்தாது சட்டங்களையும் மீறி விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கு அப்பால் செயற்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

விழிப்புணர்வு

முன்னர் குறிப்பிட்ட அறிகுறிகள் யாருக்கேனும் காணப்படின் அவர் வீட்டில் தானாகவே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

பின்னர் கிராமத்தில் உள்ள பொது சுகாதார பரிசோதகரின் உதவியுடன் வைத்தியரின் ஆலோசனை பெற எத்தணிக்க வேண்டும். நாம் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்வதற்கு மறக்கக் கூடாது.

அத்துடன் மேலதிகமாக ஒரு முக கவசம் கொண்டு செல்ல வேண்டும். நாம் எப்பொழுதும் கை கழுவும் திரவத்தின் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும்.

இருவர் உரையாடும் பொழுது முக கவசத்தினை கழற்றாமலும் மேலும் குறைந்தது இரண்டு மீற்றர் இடைவெளியிலிருந்து உரையாடுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டமாக இருந்து உரையாடுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொழுது கை, கால், முகம் என்பவற்றினை நன்றாக சவர்க்காரமிட்டு சுத்தம் செய்த பின்னர் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை நன்றாக செவிமெடுத்து அதன்படி செயல்பட வேண்டும். தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடித் திரிவதை நாம் முற்று முழுதாக தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக அனைவரும் வெழியில் செல்லாமல் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் சென்று தமது குடும்பத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

இன்னும் ஒரு நபருடன் உரையாடும் பொழுது கை குலுக்குதல், ஒட்டி உறவாடுதல் என்பவற்றினை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டையால் வாயை மூடி தும்முதல், அல்லது இருமுதல் வேண்டும்.

முடிவுரை

கொரோனா தொற்றானது இன்றளவில் பல லட்சம் உயிர்களை பலி வாங்கிய ஒரு கொடிய நோயாக மக்கள் மத்தியில் ஆக்கிரமித்துள்ளது.

இதனால் சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் விழிப்புணர்வுகளை நாம் மனதில் பதித்து செயற்படுவோமாயின் இக்கொடிய கொரோனா தொற்றிலிருந்து நாம் மீட்பு பெறலாம்.

You May Also Like:

டெங்கு ஒழிப்பு கட்டுரை

மருத்துவப் பணி கட்டுரை