காலை வணக்கம் பொன்மொழிகள்

இந்த பதிவில் உள்ள காலை வணக்கம் பொன்மொழிகள் உங்கள் காலை பொழுதினை உற்சாகத்துடன் தொடங்க உறுதுணையாக இருக்கும். இந்த வரிகள் மூலம் உங்கள் விருப்பத்துக்கு உரியவர்களுக்கு உங்கள் காலை வணக்க வாழ்த்தை கூறிக் கொள்ள முடியும்.

காலை வணக்கம் பொன்மொழிகள்

பூத்து குலுங்கும் பூ
மலர்களை போல நல்ல
எண்ணங்களுடன் அமைய
என் இனிய காலை வணக்கங்கள்..!

நேரமாய் புறப்படு..!
நேர்மையாய் செயல்படு..!
காலத்தை வீணாக்காதே..!
வீழ்ந்தால் அதே இடத்தில்
இருக்காதே எழக்
கற்றுக் கொள்..! அனைவருக்கும்
என் இனிய காலை வணக்கம்..!

என் வாழ்க்கையில் எது
கிடைக்காமல் போனாலும்
பரவாயில்லை..! உன்
அன்பும் காதலும் என்
வாழ்நாள் முழுவதும்
கிடைக்க வேண்டும்..!
பாசமான இதயத்திற்கு
என் காலை வணக்கம்..!

தைரியம் என்பது உடமை
அல்ல..! உயிரோடு கலந்த
மூச்சைப் போன்றது..!
தைரியத்தை கையில் பிடி..!
துணிவோடு வெற்றிப்
படியை நாடு..!
தன்னம்பிக்கை
தானாக வரும்..! சாதிக்கும்
தினம் மலரும்..! அனைவருக்கும்
காலை வணக்கம்..!

முறையான பயிற்சி
இல்லாமல் தோல்வி கண்ட
பின் காலத்தை குறை
கூறாதீர்கள்..! அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்..!

ஒரு சிறு நொடிக் கோபத்தால்
நாவால் சிதறும் வார்த்தைகள்
தான் இதயத்தில் பெரிய
இடியாக விழும்..! அனைத்து
உறவுகளுக்கும் என்
இனிய காலை வணக்கம்..!

இரவுக்கும் உறக்கம்
சொல்லி பகலுக்கு வணக்கம
சொல்லி சூரிய நண்பனை
வரவேற்கிறேன் அனைவருக்கும்
இனிய காலை வணக்கம்..!

உனக்கு பிடித்தவரிடம்
அன்பாக இரு உன்னை
பிடித்தவரிடம்
உண்மையாக இரு..!
இனிய காலை வணக்கம்..!

தோல்வி உன்னை
வீழ்த்தும் போதெல்லாம்
குழந்தையாகவே விழு
விழுந்தவுடன் மீண்டும்
மீண்டும் எழுந்து நடக்கலாம்..!
இனிய காலை வணக்கம்
நண்பர்களே..!

உன் இன்பத்தை பகிர்ந்து
கொள்பவர்களுக்கு உன்
இதயத்தில் இடம்
கொடுத்து விடு..!
உன் துன்பத்தை பகிர்ந்து
கொள்பவர்களுக்கு உன்
இதயத்தையே கொடு..!
இனிய சூரிய வணக்கம்..!

பிறக்கும் போது யாரும்
மகிழ்ச்சியாக பிறப்பதில்லை
அழுது கொண்டே
பிறக்கிறார்கள்..! ஆனால்
மகிழ்ச்சியாக வாழ்வதற்கான
தகுதியுடன் பிறக்கிறார்கள்..!
உறவுகள் அனைவருக்கும்
என் காலை வணக்கம்..!

வாழ்க்கை உன்
எதிரியாகும் போது
நீ சரிந்து விட்டால் அது
சாதாரணம் அதுவே
நீ எழுந்து நின்றால்
அது தான் சரித்திரம்..!
அனைத்து நண்பர்களுக்கும்
காலை வணக்கம்..!

விடியும் என்று சூரியனை
நம்பிய நீ முடியும் என்று
உன்னை நம்பு..! அனைத்தும்
சாத்தியமே..! அனைவருக்கும்
காலை வணக்கம்…!

இந்த விடியல் பொழுது
உன் சாதனைக்காக தான்
சோதனைகளை கடந்து
செல்ல தன்னம்பிக்கை
மட்டும் உனக்கு போதும்..!
காலை வணக்கம்
தோழர்.. தோழிகளே..!

வியர்வை துளிகளும்
கண்ணீர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்
ஆனால் அவை தான்
உன் வாழ்வை
இனிமையானதாக மாற்றும்..!
இனிய காலை வணக்கம்..!

மகான் போல நீ
வாழ வேண்டும் என்று
அவசியம் இல்லை..!
உன் மனச் சாட்சி படி
நீ வாழ்ந்தால்
போதுமானதாக இருக்கும்..!
இனிய காலை வணக்கம்..!

இரவு வணக்கம் கவிதை வரிகள் இங்கே படிக்க முடியும்.