இந்த பதிவில் நமது வாழ்க்கைக்கு ஊக்கத்தை கொடுக்கும் “படித்ததில் பிடித்தது தத்துவங்கள்” தொகுப்பை காணலாம்.
- படித்ததில் பிடித்தது தத்துவங்கள்
- Padithathil Pidithathu Quotes In Tamil
படித்ததில் பிடித்தது தத்துவங்கள்
1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம்.
2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன.
3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.
4. வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.
5. பொய்க் கல்வி பெருமை பேசும். மெய்க்கல்வி தாழ்த்தி சொல்லும்.
6. மருந்து சிலசமயங்களில் பலனளிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் விஷமோ ஒருப்போதும் விளைவு தராமல் போகாது.
7. நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக பழகத்தான் சரியாக வரும்.
8. வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகது, வாழ்க்கையும் புனிதமாகது.
9. வளமுடன் வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையில் நீ நண்பர்களை அறிவாய்.
10. திறமை என்பது அனுபவம், அறிவு, ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் வெளிப்பாடே.
11. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு.
12. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு.
13. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம்.
14. அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக் குறையையும் பொறுக்காது.
15. முடிந்ததை நினைப்பவன் மனிதன்; நினைத்ததை முடிப்பவன் இறைவன்.
16. பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும் செலவு செய்யும்போதும் தீமை பயக்கும்.
17. அரும்பெரும் செயல்களைச் செய்ததும், செய்யப்போவதும் தன்னம்பிக்கையே.
18. எம்முடைய இறப்பை பற்றி நாம் மறந்திருக்கும் வரை, அது ஒருபோதும் எமக்கானது அல்ல.
19. பிரிவின் வேதனையில் மட்டுமே நாம் அன்பின் ஆழத்தைக் காணமுடியும்.
20. பொய்மை எளிதானது, உண்மை மிகவும் கடினமானது.
Padithathil Pidithathu Quotes In Tamil
21. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது.
22. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே
23. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார்.
24. ஒரு சிறந்த மொழியானது பெரும்பாலும் எளிய வார்த்தைகளாலேயே உருவாக்கப் படுகின்றது.
25. ஒருவரின் கடமை மற்றவரின் மனதை நிறைசெய்வதாக இருந்தால் அதுவே அதற்கு கிடைத்த பரிசாகும்.
26. இரு இதயங்களின் காதல் ஒரு தெய்வீக தன்மையை உருவாக்குகிறது.
27. பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள், பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.
28. கோடையில் வியர்வை சிந்தாதவன், குளிர்காலத்தில் உறைந்துபோக கற்றுக்கொள்ள வேண்டும்.
29. நண்பர்களை பெற்றிருக்கும் யாரும் பயனில்லாத மனிதனில்லை.
30. உங்களை நீங்களே மதிப்பது ஆணவம். பிறர் உங்களை மதிப்பது பெருமை!
31. சந்தேகம், கோழையின் குணம்.
32. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
33. சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
34. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள்.
35. நீங்கள் அசாதாரணமான ஒரு செயலுக்குத் தயாராகவில்லை என்றால், சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்.