மனிதனின் வாழ்வை நல்வழிப்படுத்தி, அறிவை புகட்ட என கல்வியின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது. இந்த பதிவில் “கல்வி பற்றிய பொன்மொழிகள்” காணலாம்.
- கல்வி பற்றிய பொன்மொழிகள்
- Kalvi Quotes In Tamil
- Kalvi Ponmoligal In Tamil
கல்வி பற்றிய பொன்மொழிகள்
1.தொழில் இல்லாத கல்வி
நீரின்றி வாடும் மரத்தை
போன்றது.!
2. கல்வி என்பது
பல மூட்டை நூல்களை
வாசிப்பது இல்லை..
அடக்கம்.. ஒழுங்கு.. அறம்..
மற்றும் நீதி இவற்றின்
முன்மாதிரி ஆகும்.!
3. படிப்பு, படிப்பு என்று பலரும்
படித்துக்கொண்டே இருக்கிறார்கள்
சிலர் நமது சிந்தனை சக்தியை
இழப்பது வரை படிக்கிறார்கள்.
படிப்பதை நிறுத்திவிட்டு முதலில்
படித்ததைப் பற்றி சிந்தியுங்கள்.
4. ஒழுக்கம் உண்டாகாத இலக்கியக்
கல்வியால் ஒருவித பயனும்
கிடையாது.
5. மாணவனுக்கு சிறந்த பாடப்புத்தகம்
அவனுடைய ஆசானே என்பது
உறுதியான நம்பிக்கை.
6. கணிதம் சந்தோஷத்தை கூட்டவோ..
கவலையை கழிக்கவோ நமக்கு
கற்றுத் தருவதில்லை..
ஆனால் அனைத்து பிரச்சனைக்கும்
தீர்வு உண்டு என்பதை
கற்றுத் தருகின்றது.
7. கல்வி என்பது பெருமைக்காக
தேடிப் பெறுவது அல்ல..
பெற்றதை கொண்டு பெருமை
தேடிக் கொள்வதாகும்.
8. கற்பது கடினம்
அதை விடக் கடினமானது
கற்றதை மறப்பது.
9. மாணவர்களை மதிப்பதில் தான்
கல்வியின் ரகசியம்
அடங்கி இருக்கின்றது.
10. பிறவி திறமையை வளர்ப்பதற்காகவே
கல்வியறிவு பயன்பட வேண்டும்.
11. இளமைக் காலத்தில்
கல்வியை புறக்கணித்தவன்
எதிர்கால வாழ்வை இழந்தவன்
ஆகிறான்.
12. எடுத்தால் குறைவது செல்வம்..
கொடுத்தால் வளர்வது கல்வி.
13. அறிவு புகட்டாத கல்வி..
சாமர்த்தியமாய் கழித்த
சோம்பலேயாகும்.
14. வாழ்க்கை அனுபமில்லாத எவரும்
கல்வி கற்றவராக முடியாது.
15. கல்வி என்பது தகவல்களை
சேகரிப்பதல்ல..
அது சிந்திப்பதற்காக மூளையை
பயிற்றுவிப்பது.
Kalvi Quotes In Tamil
16. கண்டுபிடிப்பாளர்கள் சாதாரண
மனிதர்களே.. ஆனால்
அவர்கள் தாங்கள்
கற்ற கல்வியை பற்றி அதிகம்
கவலை கொள்ளாதவர்கள்.
17. மனிதனுடைய முழு திறமைகளின்
வெளிப்பாடே.. உண்மையான கல்வி.
18. கல்வி என்பது ஒரு மூட்டை
நூல்களை வாசிப்பது அல்ல..
அடக்கம்.. ஒழுங்கு.. அறம்.. நீதி..
இவற்றின் முன்மாதிரி ஆகும்.
19. நல்ல கல்வி என்பது
உடல்.. உள்ளம்.. ஆன்மா..
ஆகிய மூன்றையும் ஒருமித்து
வளர்க்க வேண்டும்.
20. அறிவை மேலும் மேலும் கூர்மை
ஆக்கிக்கொள்ள பயன்படும்
கருவி தான் கல்வி.
21. பெற்ற பிள்ளை கைவிட்டாலும்..
கற்ற கல்வி உன்னை கை விடாது..
கல்வி ஆபரணம் அல்ல.. ஆடை.
22. பளிங்கு கல் அழகிய சிற்பம்
ஆவது போல்
கல்வியால் ஆன்மா
சிறப்படைகிறது.
23. கற்றறிந்த மனிதர்கள் என்று
யாரும் இல்லை..
கற்ற மனிதர்கள் தான்
இருக்கின்றனர்.
24. நன்கு கற்று உணர்ந்த மனிதனே
தன்னுடைய அறியாமை பற்றி
அறிவான்.
25. கல்வியின் பெரிய நோக்கம்
அறிவு அல்ல.. செயல்.
26. ஞானம் வயதில் இருந்து
கிடைப்பதல்ல..
கல்வி மற்றும் கற்றலில்
இருந்தே வருகிறது.
27. கல்வி என்பது வாழ்க்கைக்கான
தயாரிப்பு அல்ல..
கல்வி தான் வாழ்க்கை.
மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..
நம்பிக்கை பொன்மொழிகள் – Confidence Quotes in Tamil