இந்த தொகுப்பில் கணவன் மனைவி காதல் கவிதைகள் பார்க்கலாம்.
- கணவன் மனைவி காதல் கவிதைகள்
- கணவன் மனைவி காதல் கவிதை
- மனைவி காதல் கவிதைகள்
- மனைவி காதல் கவிதை
- காதல் கவிதைகள் கணவன் மனைவி
கணவன் மனைவி காதல் கவிதைகள்
கணவன் மனைவி நீயா..?
நானா..? என வாழ்க்கை
நடத்துவதை விட.., நீயும்
நானும் என்று வாழ்க்கை
நடத்தினால் இல்லறம்
சிறப்பாக இருக்கும்.
எவ்வளவு கடும் கோபமான
சூழ்நிலையிலும் தன் அன்பு
மனைவியிடம் தவறான
வார்த்தைகளை உபயோகிக்காமல்
பேசுபவனே நல்ல கணவன்.
கணவன் மனைவி உறவில்
சண்டை நடந்தாலும் அழகு
தான் சமாதானம் ஆனாலும்
அழகு தான்.
பெண்ணின் பிரசவ போராட்டம்
ஒரு மரணப் போராட்டம் என்று
உணர்ந்த எந்த ஆணும்
மனைவியை மதிக்காமல்
இருக்க மாட்டான்.
காதலிக்க அன்பான கணவன்
அழகான குழந்தைகள்
சொந்தமாக ஒரு சிறு வீடு
இது தான் பல பெண்களின்
கனவு.
உடலுக்கு துணையாக
மட்டுமல்ல.. மனதிற்கு
துணையாகவும் வாழ்பவர்கள்
தான் உண்மையான
கணவன் மனைவி..!
கருத்து வேறுபாடு ரசனை
வேறுபாடு இருந்தும் மனம்
ஒன்றி வாழ்வதே
கணவன்-மனைவி உறவு.
மனைவியை தன் தாயாக
நினைத்துக் கொள்ளும்
ஆண்களும், தன் கணவனை
பிள்ளையாக நினைத்துக்
கொள்ளும் பெண்களும்
இருக்கும் வரை உண்மை
காதலுக்கு மரணமில்லை.
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும்
எனக்கு நீ.. உனக்கு நான்..
என்ற இந்த புனிதமான உறவு
மட்டும் போதுமானது.
எந்த சூழ்நிலையிலும் எதையும்
எதிர்பார்க்காமல் அன்பு
செலுத்தும் உண்மையான
உறவு கணவன் மனைவி
உறவு மட்டும் தான்.
என்னை கருவில் சுமந்த
தாயையும் என் கருவை
சுமக்கும் உன்னையும் நான்
கல்லறை செல்லும்
வரை நேசிப்பேன்.
கணவன் மனைவி காதல்
என்பது கட்டிப்பிடித்தல்
முத்தமிடுதல் மட்டும் அல்ல.
அதற்கும் மேலாக தன்னோடு
வாழ்பவரின் உணர்வையும்
வலிகளையும் புரிந்து
கொள்வதில் தான் இருக்கிறது.
தன் மனைவியின் கோபத்திற்கு
அடங்கவும் அதே மனைவியை
தன் அன்பால் அடக்கவும் தெரிந்த
ஆண் கணவனாக கிடைக்கும்
போது இல்லற வாழ்க்கை
சொர்க்கமாக அமையும்.
ஒரு ஆண் தன் கோபத்தைக்
காட்டுவதும், அடிபணிந்து
போவதும் தன் உயிரினும்
மேலான அன்பைப் பொழிவதும்
தன் ஆசை மனைவிடம்
மட்டுமாக தான் இருக்கும்.
கணவனை விட கணவனின்
குடும்பத்தை உயிராய் நேசிக்கும்
மனைவி தான் கணவனின்
உயிரில் கலக்கிறார்கள்.
விழுதுகள் மரத்தை தாங்கலாம்
ஆனால் வேர் மட்டுமே அதை
வாழ வைக்க முடியும்.. அதே
போல தான் கணவன் மனைவி
எனும் உறவும்.
கணவன் மனைவிக்கு குழந்தை
பிறப்பது இயல்பு.. ஆனால்
கணவன் மனைவிக்கும்..
மனைவி கணவனுக்கும்..
குழந்தையாக மாறுவது வரம்.
தன் கணவன் பணக்காரனாக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
கடன் காரனாக மாறி விடக் கூடாது
என நினைப்பவள் தான்
உண்மையான மனைவி.
கணவன் மனைவி உறவு என்ற உறவிற்கு மேலான உறவு இந்த உலகில் வேறெதுவும் இல்லை இதை புரிந்து கொண்டால் மட்டும் போதும் இல்லறம் சிறப்பாக இருக்கும்.
மேலும்