நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் கட்டுரை

Abdul Kalam Katturai In Tamil

இந்த பதிவில் நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் கட்டுரை பதிவை காணலாம்.

இந்த உலகை விட்டு பிரிந்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் அப்துல் கலாம் அவர்கள்.

வறுமையான குடும்பத்தில் பிறந்து உலகம் போற்றும் சாதனையாளராக மாறிய இவரது வரலாறு பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

  • அப்துல் கலாம் பற்றிய கட்டுரை
  • Abdul Kalam Katturai In Tamil
நூலகத்தின் சிறப்பு கட்டுரை

நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு மற்றும் வாழ்க்கை முறையும்
  3. இந்திய குடியரசு தலைவர் ஆன கதை
  4. அவரது சாதனைகள்
  5. முடிவுரை

முன்னுரை

நான் விரும்பும் தலைவர்களில் அப்துல் கலாம் அவர்களுக்கு தனியிடம் உண்டு. ஏனெனில் இவர் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து உலகமெங்கும் இந்தியாவின் பெருமையை பேச செய்த அணுவிஞ்ஞானி ஆவார்.

பின்னாளில் இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்தவர். இவர் பின்பு தனது வாழ்நாளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை செய்தார். இவர்கள் மூலமாக இந்தியா உலக அரங்கில் தலைசிறந்த நாடாக மாறும் என கனா கண்டவர் கலாம் அவர்கள்.

கனவு காணுங்கள் அதுவே உங்கள் வாழ்வை ஒருநாள் மாற்றும் என்று கூறியவர். வறுமையான பின்புலத்தில் இருந்து தனது தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்றவற்றால் சாதித்து காட்டிய அப்துல்கலாம் அவர்களுடைய வரலாறு பலபேருக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

இக்கட்டுரையில் நான் விரும்பும் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கை முறை, இந்திய குடியரசு தலைவர் ஆன கதை மற்றும் அவரது சாதனைகள் நோக்கப்படுகின்றன.

பிறப்பு மற்றும் வாழ்க்கை முறை

இவர் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஜய்நுலாப்தீனுற்கும் ஆஷியம்மாவிற்கும் மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார்.

இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை பயின்றார். இவரது குடும்பம் எளிமையான குடும்பம் என்பதால் அதன் வருமானத்தை சமாளிக்கும் வகையில் பகுதி நேரங்களில் செய்தி தாள்களை விநியோகிக்கும் வேலை பார்த்தார்.

இவரிற்கு கற்பித்த சிவசுப்ரமணியம் என்ற ஆசிரியரின் உதவியோடு இவர் மேல்நிலை கல்வியினை தொடர்ந்தார். 1955 இல் சென்னை எம்.ஜ.ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பு படித்தார்.

இவருக்கு தான் விமானியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது இதற்காக நடாத்தப்பட்ட தேர்வில் இவர் 9 ஆவது இடம் பிடித்தார். இருந்தும் இவருக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

1960 இல் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வானூர்தி அபிவிருத்தி அமைப்பில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார் பின்பு இஸ்ரோவில் இணைந்து பணியாற்ற துவங்கினார்.

குடியரசு தலைவரான கதை

இவர் தொடர்ச்சியாக விண்வெளியில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஏவிய செயற்கை கோளான Slv 3 இனை ஏவுவதில் முக்கிய பங்காற்றினார்.

இதனை பாராட்டும் வகையில் இந்திய அரசின் 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் பெரிய விருதான “பத்ம பூசன்” விருதானது வழங்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவை தனது பணிகளால் பெருமையடை செய்தார்.

அதை தொடர்ந்து 1963 தொடக்கம் 1983 வரை இஸ்ரோ வில் சிறப்பாக பணியாற்றினார். பின்பு 1999 இல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்தார் பின்பு “அக்னி பிரித்வி ஆகாஸ்” எனப்படும் ஏவுகணை திட்டங்களில் முக்கிய பங்காற்றினார்.

இவ்வாறு இவரது சாதனைகளையும் இவரது சேவையையும் பலரும் வியந்தனர்.

பின்பு 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவரானார். மக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்டார்.

இவரது சாதனைகள்

இவர் இந்தியாவிற்கென செயற்கை கோள்களை விண்ணில் ஏவிய பெருமைக்குரியவர் மற்றும் கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளை உருவாக்கினார்.

மற்றும் இவர் சிறுவர்கள் இளைஞர்களுக்கு கற்பிப்பதை விரும்பினார் இதனால் சென்னை பல்கலைக்கழகம் மைசூர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வருகை விரிவுரையாளராக பணியாற்றினார்.

இவர் இந்தியாவின் எல்லா பாகங்களிற்கும் சென்று இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கனவை மக்கள் மனதில் பதிய வைத்தார். நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றி உள்ளார்.

அறிவார்ந்த இளைஞர்கள் தமது அறிவு, நேரம், ஆற்றலை பயன்படுத்தி 2020 இற்குள் இந்தியாவை அனைத்து துறையிலும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுவர வேண்டும் என விரும்பினார்.

இவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார் இவர் “அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள்” உள்ளிட்ட நூல்களையும் எழுதினார்.

இவ்வாறு இந்தியாவின் இளைஞர்களின் மனதில் புது ஒளியை பாய்ச்சியவர் இந்த தலைமுறையின் மிகச்சிறந்த தலைவர் ஆவார்.

முடிவுரை

“கஷ்டம் வரும் போது கண்களை மூடாதே அது உனை கொன்று விடும் கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடுவாய்” என்று கூறி கடினமான சூழல்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று வழிகாட்டினார்.

இவர் பல்வேறான விருதுகளை பெற்றிருந்தாலும் கூட மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர்.

இவரது உந்துதல் இன்றைய இந்தியாவுக்கும் உலகத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதில் ஜயமில்லை.

You May Also Like:

கல்வியின் சிறப்பு கட்டுரை

ஆசிரியர் பணி கட்டுரை