Quotes about friendship in Tamil that will help to understand the value of friendship. This post includes friendship Tamil quotes in the Tamil language.
Quotes About Friendship In Tamil
உண்மையான நட்பின்
மதிப்பு அதனை இழக்கும்
வரை பலரும் உணர்வதில்லை.
அதை இழந்த பிறகு தான்
அதன் மதிப்பை
பலரும் உணர்வார்கள்.
நம்மை பற்றி நமக்கே
தெரியாத விடயங்களை
கூட தெரிந்து வைத்திருக்கும்
அன்பு தான் இந்த நட்பு.
நண்பர்களை பற்றி
பெருமையை மற்றவர்களிடம்
பேசுங்கள் நண்பர்களின்
குறையை ஒரு போதும்
மற்றவர்களிடம் பேசாதீர்கள்.
நாம் கண் கலங்கும் போது
வரும் கண்ணீரை
துடைப்பது நட்பு அல்ல…
நமக்கு மறுமுறை கண்கள்
கலங்காமல் தடுப்பது
தான் நட்பு…!
நாம் உயரத்தில் இருக்கும்
போது வருபவர்கள்
எல்லாம் நண்பர்கள்
கிடையாது.. நம்
வறுமையின் போதும்
உடன் இருப்பவர்கள்
நட்பின் இலக்கணம்.
உண்மையான நட்பு
எந்த சூழ்நிலையிலும்
மற்றவர்கள் முன்
உன்னை விட்டுக்
கொடுக்காது.
அர்த்தமற்ற வாழ்க்கையை
அர்த்தமாக மாற்றும் சக்தி
அன்புக்கு உண்டு.. அந்த
வாழ்க்கையை அற்புதமாக
மாற்றும் சக்தி
நட்புக்கு உண்டு.
நீ துரோகிகளை
சந்திக்கும் போது தான்
சிறந்த நட்பின்
அருமையை
நீ உணர்வாய்.
மனதில் ஏற்படும்
காயங்களுக்கு நண்பன்
மருந்தாக இருப்பான்.
ஆனால் நண்பன்
ஏற்படுத்தும் காயத்திற்கு
மருந்து இல்லை.
நட்பையும்
மகிழ்ச்சியையும்
இரட்டிப்பாக்க அதை
திருப்பி நட்பிடமே
கொடுத்து விடுங்கள்.
சந்தோஷமான நேரங்களில்
சேர்ந்து சிரிப்பது மட்டும்
நட்பு அல்ல.. துக்கமான
நேரங்களிலும் சேர்ந்து
கண்ணீர் விடுவது
தான் நட்பு.
நட்பை விலை கொடுத்து
வாங்க முடியாது அது
தகுதி உடையவர்களுக்கு
சரியான நேரத்தில்
கிடைத்து விடும்.
நம் வாழ்க்கையை
இலகுவாக வாழ நாம்
செய்யும் தவறுகளை
திருத்தவும் நம்மை சரி
செய்யவும் நட்பு வேண்டும்.
சிறந்த நண்பன்
உனக்குள் இருக்கும்
சிறந்தவற்றை உலகிற்கு
கொண்டு வர
உறு துணையாக
இருப்பான்.