வெற்றி கவிதைகள் | Vetri Kavithaigal

இதில் உள்ள வெற்றி கவிதைகள் | Vetri Kavithaigal வெற்றிக்கான உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் உங்களுக்கு உணர்த்துவதாக இருக்கும்.

வெற்றி கவிதைகள் | Vetri Kavithaigal

நம்பிக்கை எனும் ஆயுதம்
உன்னிடம் இருக்கும் வரை
வெற்றி என்ற வார்த்தைக்கு
நீ தகுதி உடையவன்.

தோல்விகளை கண்ட
இதயத்திற்கு தான்
வெற்றியின் அருமை
புரியும். எனவே
தன்னம்பிக்கையை
விடாமல் வெற்றி பெறும்
வரை போராடு.

தன்னம்பிக்கை எனும்
ஆயுதம் உன்னிடம்
இருக்கும் வரை தோல்வி
எனும் தடைகள் உன்
கண்ணனுக்கு தெரியாது.

தோல்வி எனும் அடி
கிடைத்தால் தான்
வெற்றி எனும் விடை
விரைவில் கிடைக்கும்.

நாம் செய்யும் விடயங்கள்
இலகுவில் நல்ல முடிவை
தராது ஆனால் இடைவிடாத
விடாமுயற்சி வெற்றி எனும்
விடையை தேடித் தரும்.

வெற்றி எனும் முடிவை தோல்வி
என்ற பாடத்தால் தான் கற்பிக்க
முடியும். தோல்விகளிடன் இருந்து
கற்றுக் கொண்டால் மட்டுமே
உயரத்தை அடைய முடியும்.

பொதுவாக வெற்றி என்பது
எத்தனை தடைகள் தோல்விகள்
வந்தாலும் நம்பிக்கையை கை
விடாமல் விடா முயற்சியுடன்
போராடும் போதே
கிடைக்கின்றது..!

உன் வாழ்க்கைக்கான பாதையை
நீ தேர்ந்து எடுத்துக் கொள் அது
வெற்றியின் போதும் சரி
தோல்வியின் போதும் சரி.
கிடைத்தால் வெற்றி தோற்றால்
பாடம் இதை எப்போதும் நினைவில்
வைத்துக் கொள்..!

தோல்விக்கு தான் வெற்றியை
விட சக்தி அதிகம் வெற்றி
சந்தோசத்தை கொடுக்கும்..
ஆனால் தோல்வி தான்
சிந்தித்து செயல் பட
உத்வேகம் கொடுக்கும்.

வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டுமானால் ஒரு நல்ல
உறவு தேவை.. அதுவே நீ
வாழ் நாள் முழுவதும் வெற்றி
பெற வேண்டுமானால் பல
துரோகிகளும் பல எதிரிகளும்
இருக்க வேண்டும்..!

வெற்றி பெறுவது மிகவும்
எளிதான ஒன்றே நீ செய்வதை
விரும்பி தன்னம்பிக்கையுடன்
எந்த சூழ்நிலையிலும்
கைவிடாமல் விடாமுயற்சியுடன்
செய் வெற்றி நிச்சயம்..!

ஒரு வெற்றிக்கு ஒரு தோல்வியை
மறக்க செய்யும் சக்தி தான் உண்டு
ஆனால் ஒரு தோல்விக்கு பல
வெற்றிகளை அடையும்
சக்தி உண்டு..!

வெற்றி எனும் இலக்கை
அடைய துணை நிற்கும்
ஆயுதம் தான் தன்னம்பிக்கை
இந்த ஆயுதம் உன்னிடம்
இருக்கும் வரை வெற்றி
எனும் மைல் கல்லை
உன்னால் இலகுவாக
அடைந்து கொள்ள முடியும்.

ஒருவருக்கும் வெற்றி என்பது
அவ்வளவு எளிதாக கிடைத்து
விடாது பல போராட்டங்களுக்கு
பிறகு தான் அதை அடைய
முடியும் அப்படி எளிதாக
கிடைக்கும் வெற்றி நீண்ட
காலம் தங்காது.

ரோஜா செடியில் முள்ளும்
இலைகளும் அதிகமாக
இருந்தாலும் அதில் பூக்கும்
பூக்களிற்கு தான் மதிப்பு
அதிகம். வாழ்வில் பல
தோல்விகள் இருந்தாலும்
வெற்றிக்கு தான்
மதிப்பு அதிகம்.

கனவுகள் என்பது தூக்கம்
முடிந்தவுடன்கலைந்து
போவதல்ல அது வெற்றி
எனும் படிகளில் முடிவது..!

நம்பிக்கை எனும் ஆயுதம்
உன்னிடம் இருக்கும் வரை
எவ்வளவு பெரிய தடைகளையும்
தாண்டி வெற்றி எனும் உயரத்தை
உன்னால் அடைய முடியும்.

வெற்றிக்கான தன்னம்பிக்கை வரிகள் இங்கே படியுங்கள்.