இந்த பதிவில் “விவசாயம் பற்றிய பொன்மொழிகள்” காணலாம்.
உயிர்கள் அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் உணவை படைக்கும் விவசாயிகளை சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். உழவன் இல்லையென்றால் உணவு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- விவசாயம் பொன்மொழிகள்
- விவசாயி பொன்மொழிகள்
- Vivasayam Ponmozhigal In Tamil
விவசாயம் பற்றிய பொன்மொழிகள்
1.படைத்தவன் மட்டுமே இறைவன் அல்ல.. மற்றவர் பசிக்காக உழைப்பவனும் இறைவன் தான்.
2. பசியை போக்கும் அன்னை தெய்வம் என்றால்.. உழவு செய்து அன்னம் படைக்கும் உழவன் கூட கடவுள் தான்.!
3. நீங்கள் விவசாயம் செய்யவில்லை என்பதற்காக விவசாயி அழிவை வேடிக்கை பார்க்காதீர்கள்.. நாளை உங்கள் பிள்ளைகள் உணவிற்காக கையேந்தும் நிலை வரலாம்.!
4. மண்ணை கடவுளாகவும் விவசாயத்தை உயிராகவும் நினைப்பவர் விவசாயி மட்டும் தான்.
5. இளம் விஞ்ஞானியை விட இளம் விவசாயி தான் நம் நாட்டுக்கு தேவை.
6. கீழே சிந்தும் உணவை கண்டால் விவசாயிக்கு மட்டுமே அதிகம் வலிக்கும்.
7. பணம் தேடிக்கொள்ள ஆயிரம் தொழில்கள் உண்டு.. ஆனால் உயிர் வாழ உணவை தேடிக்கொள்ள விவசாயம் மட்டும் தான் இருக்கிறது.
8. கல்லாக இருந்தாலும் கடவுள் தானே என்று நினைக்கும் இந்த உலகம் கடவுளாக இருக்கும் விவசாயியை ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை.
9. இதுவரை விளம்பரம் செய்யாத ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான். ஏனென்றால் விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்.
10. உணவு அனைவருக்கும் வேண்டும் ஆனால் யாரும் விவசாயம் செய்வதில்லை. தண்ணீர் அனைவருக்கும் வேண்டும் ஆனால் யாரும் அதை சேமிப்பதில்லை.. நிழல் அனைவருக்கும் வேண்டும் ஆனால் மரங்களை பாதுகாக்க மாட்டார்கள்..!
11. ஒருநாள் உலகம் நிச்சயம் இவர்களை தேடும்.. அந்த நேரம் விவசாயி மட்டுமல்ல விவசாயமும் எங்கோ தூரத்தில் தொலைந்தது போயிருக்கும்.
Vivasayam Ponmozhigal In Tamil
12. விளை நிலம் எல்லாம் கட்டிடம் ஏற்றி கார்மேகம் சூழ்ந்த நாட்டில் தார் சாலை அமைத்து பொய் அழகு பார்க்கும் வஞ்சகம் சூழ்ந்த நாடு இங்கே.!
13. பசியை போக்கி பணக்காரன் ஆனவன் அன்று.. பசியால் வாடி பிணமாகிறான் இன்று.
14. போலியான தொழில்களில் போலியாகாத தொழில் விவசாயம்.
15. மண்ணை சொர்க்கமாக மாற்றிய பெருமை விவசாயிகளை மட்டுமே சேரும்.
16. அவன் ஆடை அழுக்காக இருந்தாலும் அன்னை பூமிக்கு அவனே பச்சாடையை அணிவித்து விடுகிறான்.
17. சாமி சோறு போடுமா என்று தெரியவில்லை ஆனால் விவசாயி சாமிக்கே சோறு போடுகின்றவன்.
18. மண்ணை காக்க வாருங்கள் மகிமை மிக்க விவசாயத்தை காப்போம்.
19. விளையும் நிலங்களை அதிக விலை கிடைக்கும் என்று விற்று விடாதே.. பிறகு விளையும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
20. நான் விவசாயின் குடும்பத்தில் பிறந்தமைக்காக கவலைப் படவில்லை.. மாறாக நான் விவசாயின் குடும்பத்தில் பிறந்தமைக்கு கர்வம் கொள்கிறேன்.
21. வியர்வை வடித்து சாகுபடி செய்து உன் வயிற்றை நிரப்புவான் விவசாயி.. உணவூட்டும் விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்.! விவசாயத்தை காப்போம்.! அதற்கு முதலில் விவசாயியை காப்போம்.
மேலும் படியுங்கள்..