இந்த பதிவில் சுதந்திர போராளி “விடுதலைப் போரில் பகத்சிங் கட்டுரை” பதிவை காணலாம்.
பகத்சிங்க் வாழ்ந்த காலம் குறுகியது எனிலும் பல நூற்றாண்டுகள் தாண்டியும் எல்லோர் மனதிலும் வாழ்கிறார்.
விடுதலைப் போரில் பகத்சிங் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப வாழ்க்கை
- புத்தகப் பிரியர் பகத்சிங்
- விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு
- பகத்சிங்கின் தூக்கு தண்டனை
- முடிவுரை
முன்னுரை
இந்திய விடுதலைப் போரில் போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்பும், பங்களிப்பும் முக்கியமானது. அந்த வகையில் இந்திய விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்களிப்பானது போற்றுதற்குரியது ஆகும்.
இந்தியாவில் மாவீரன், புரட்சியாளன் எனக் கூறினால் முதலில் நினைவிற்கு வருவது மாவீரன் பகத்சிங் தான். பல இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறார். நாட்டிற்காகப் போராடி மடிந்ததால் இவரை மாவீரன் என்று அழைக்கிறார்கள்.
ஆங்கில ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திரப் போராளி பகத்சிங் விடுதலைப் போரில் ஆற்றிய பங்கினை இக்கட்டுரையில் நோக்கலாம்.
ஆரம்ப வாழ்க்கை
பகத்சிங் அவர்கள் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி பஞ்சாப் மாநிலத்தில் லாயல்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங், வித்யாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
இவரது குடும்பம் விடுதலைப் போராட்ட உணர்வைக் கொண்ட குடும்பம் ஆகும். இதனால் இவருக்கும் விடுதலை உணர்வு இயல்பாகவே இருந்தது. இளம் வயதிலேயே நாட்டுப்பற்று உள்ளவராகவே விளங்கினார்.
இவரது ஆரம்பக் கல்வி லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் ஆரம்பமானது. இவர் இளமைக் காலத்திலேயே லாலா லஜபதிராய் மற்றும் ராஷ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டார். மேலும் பல விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார்.
புத்தகப் பிரியர் பகத்சிங்
இவர் ஒரு புத்தகப் பிரியர் தன்னுடைய பள்ளித் தோழர் ஜய்தேவ் கபூருக்கு எழுதிய கடிதத்தில் கார்ல் லிப்னேக்கின் “மிலிற்ரியிசம்” லெனின் “இடதுசாரி கம்யூனிசம்” அப்டன் சினக்லேயரின் “உளவாளி” ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்தனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
பகத்சிங் தூக்கிலிடுவதற்கு 2மணி நேரத்தின் முன்பு அவருடைய வழக்கறிஞர் சிறைக்கு வந்தபோது லெவல் யூஷனரி லெனினின் புத்தகத்தைக் கொண்டு வரவில்லையா? என்று வினாவினார். இதிலிருந்து புத்தகங்கள் மீது பகத்சிங் கொண்டுள்ள பிரியத்தினை விளங்கிக் கொள்ளலாம்.
விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு
இவர் தனது 12வது வயதில் இந்திய விடுதலையே எனது இலட்சியம் என முழங்கினார். தனது கடைசி மூச்சின் போது தனது பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டுமென எண்ணினார்.
தனது உயிர் போகும் கடைசி நிமிடத்திலும் இந்தியாவின் விடுதலையை மட்டுமே நினைத்த மாவீரன் ஆவார்.
இவர் தனது 13வது வயதில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். “வந்தே மாதரம்” என காகிதத்தில் எழுதி அதனை சுவர்களில் ஒட்டினார். இந்தியாவின் தேசிய இளைஞர் சங்கத்தை 19வது வயதில் நிறுவினார்.
ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை விடுதலை பெற செய்வது மட்டுமன்றி இந்தியாவின் முதலாளிகளிடம் இருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெறவேண்டும் என எண்ணினார்.
மகாத்மா காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த போதும் அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெற முடியாது. ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.
1924 ஆம் ஆண்டு “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். 1926 ஆம் ஆண்டு நவ்ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை நிறுவினார். இளைஞர்கள் பார்வை இச் சங்கத்தின் மீது திரும்பியது.
நாடு முழுவதிலுமுள்ள இளைஞர்களைத் திரட்டி பல போராட்டங்களை நிகழ்த்தினார். இதனால் ஆங்கிலேயர்கள் இவர் மீது பொய்யான வழக்குகள் தொடுத்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து மீண்டு வந்த பின்னர் தமது இறுதி லட்சியம் சோசலிசம் என்பதனை வலியுறுத்தினார்.
பகத்சிங்கின் தூக்குதண்டனை
ஆங்கிலேய அரசுக்கு எதிரான அகிம்சை வழியை தவிர்த்து முற்றிலும் சண்டையிட்டு விரட்டி அடிக்க வேண்டும் என நினைத்த பகத்சிங் பலமுறை அவர்களை தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து தாக்கினார்.
இந்தியாவில் அறவழிப் போராட்டம் நடைபெற பகத்சிங் மட்டும் ஆங்கிலேயே அரசை தைரியத்துடன் எதிர்த்தார். செனாட்ரல் அசெம்பிளி ஹோலில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் கட்டிடத்தின் உள்ளே வெடிகுண்டு வீசி தாக்கினார்.
ஆங்கிலேயரை எதிர்த்து ஆக்ரோஷமாக இருந்ததைக் கவனித்த ஆங்கிலேயர் பகத்சிங்கினை முடிவுக்குக் கொண்டுவர எண்ணினர்.
மற்றொரு முறை நடைபெற்ற ஆங்கிலேயர்கள் இடையிலான கூட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகத் துண்டுப்பிரசுர காகிதத்தைப் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று இந்தியாவை மேலோங்கி கோஷமிட்டார்.
இதனால் சாண்டர்சை சுட்டுக்கொன்ற வழக்கினை மீண்டும் எடுத்து பகத்சிங்குக்குத் தூக்கு தண்டனை விதித்தனர்.
தூக்கு தண்டனை ஒப்புகைப் பத்திரத்தில் மகாத்மாகாந்தி கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி 1931 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி தனது 24ம் வயதில் தூக்கிலிடப்பட்டார்.
முடிவுரை
போராளியின் வாழ்க்கை என்பது சரித்திரம் மட்டுமல்ல அது ஒரு பாடமும் கூட. இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்கதாகும்.
வாழ்வதன் மூலமாக மட்டுமல்ல இறப்பதன் மூலமாகவும் ஓர் சகாப்தத்தை உருவாக்க முடியும் என வாழ்ந்து காட்டியவர் பகத்சிங். இவர் வாழ்ந்த காலம் குறுகியது எனிலும் பல நூற்றாண்டுகள் தாண்டியும் எல்லோர் மனதிலும் வாழ்கிறார் மாவீரன் பகத்சிங்.
You May Also Like: