பொன்மொழிகள் பொன்மொழிகள்

பொன்மொழி

இந்த பொன்மொழிகள் பொன்மொழிகள் என்ற தலைப்பில் உள்ள வரிகள் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகளை உங்களுக்கு கொடுக்கும்.

பொன்மொழிகள் பொன்மொழிகள்

மிகச் சிறந்த பலன்கள்
எல்லாம் கடின உழைப்பினால்
மட்டுமே கிடைக்கும்.

உன்னை நீ உயர்வாக
நினைத்தால் உன்னால்
உயர்ந்திட முடியும்..
திறமைசாலி என
நினைத்தால் உன்னால்
திறமைசாலி ஆக முடியும்.

தோல்வி இல்லாத
வாழ்வில் பயன் ஏதும்
இருப்பதில்லை..
போராட்ட உணர்வே
வாழ்விற்கு சுவை
அளிக்க கூடியது.

உன் இதயத்தில்
எவ்வளவு பெரிய வலிகள்
இருந்தாலும் பிற
மனிதர்களிடம் இனிமையாக
பேசினால்.. இந்த உலகமே
உன்னிடம் பேச
ஆசை கொள்ளும்.

தெரியாது என்பதை
எந்த தயக்கமும் இன்றி
தைரியமாக
ஒப்புக்கொள்ளுங்கள்..
அதே நேரம் தெரியாததை
தெரிந்து கொள்ள
முயற்சி செய்யுங்கள்.

வாழ்க்கையில் வயது
செல்லச் செல்ல
தோல் சுருங்கும்.. ஆனால்
மகிழ்ச்சியை
விட்டு விட்டால் வாழ்வே
சுருங்கி விடுகின்றது.

உனக்கு உண்டாகும்
பிரச்சனைகளை உன்னால்
மட்டுமே சரி செய்ய முடியும்
ஏனென்றால் அதை
உருவாக்கியவனே நீ தானே.

நீங்கள் மற்றவர்களால்
நேசிக்கப்பட வேண்டும்
என்றால் முதலில்
உங்களை நீங்கள்
நேசிக்க
கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த உலகில்
கோளையும் முட்டாளுமே
“இது என் விதி”
என்று
புலம்புவான்.. ஆற்றல் மிக்கவன்
என் விதியை நானே
உருவாக்குவேன்”

என்று கூறுவான்.

உலகத்தின் குறைகளை
எல்லாம் கண்டுபிடிக்கும்
சிலருக்கு.. தன் குறைகள்
மட்டும் கண்ணுக்கு
தெரியாமல் போவதற்கு
பெயர் தான் சுயநலம்.

மற்றவர்களை மாற்றிக்கொள்ள
அறிவுரைகள் சொல்லுபவர்கள்
தன்னை மாற்றிக்கொள்ள
நினைக்க மறந்து விடுகிறார்கள்.

உன் அன்பு எந்த இடத்தில்
நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு
உனக்கு அல்ல
நிராகரித்தவருக்கே
என்பதை புரிந்து கொள்.

உண்டாகும் அனைத்து
துன்பங்கள் கஷ்டங்களுக்கு
இரண்டு மருந்து தான்
உள்ளன.. ஒன்று காலம்..
மற்றொன்று மௌனம்.

பணம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை தான்
ஆனால் பணம் மட்டுமே
வாழ்க்கை என்று
ஆகிவிடாது.

நேரத்தின் மதிப்பு
உங்களுக்கு தெரிந்தால்
உங்கள் வாழ்க்கையின்
மதிப்பு உங்களுக்கு புரியும்.

உங்களை நீங்களே
மேம்படுத்திக் கொள்வதற்கு
அதிக நேரம் செலவழியுங்கள்..
மற்றவர்களை நீங்கள்
விமர்சனம் செய்வதற்கு
நேரம் இல்லாது போகும்.

அதிகம் பேசாதவனை
உலகம் அதிகம் விரும்புகின்றது
அளவாக பேசுபவனை உலகம்
அதிகம் மதிக்கிறது.. அதிகம்
செயல்படுபவனை உலகம்
தலைவணங்குகிறது.

நம்முடன் வாழ்வோரை
புரிந்து கொள்வதற்கு
நம்மை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும்.

நம்பிக்கையும் மகிழ்ச்சியையும்
வாழ்க்கையின் சக்திகள்..
கவலையும் சோகங்களும்
வாழ்க்கையின் எதிரிகள்.

முட்டாளின் முழு ஆயுள்
வாழ்க்கை.. அறிவாளியின்
ஒரு நாள் வாழ்க்கைக்கு
நிகரானது.

வாழ்க்கையில் முன்னேற
துடிப்பவனுக்கு தன்னம்பிக்கை
மற்றும் விடாமுயற்சி என்ற
ஆயுதங்கள் இருக்க வேண்டும்.

எல்லோரையும்
திருப்திப்படுத்த நினைப்பவன்
வாழ்க்கையில்
வெற்றி பெற மாட்டான்.

நல்ல வாழ்க்கையை
வாழ்வதற்கு ஒருவன்
நல்ல பண்புகளை
வளர்த்துக் கொள்ள
வேண்டும்.

உண்மையான அறிவாளிகள்
புத்தகங்களை படிக்கும்
பொழுது வாழ்க்கையையும்
சேர்த்தே படிக்கின்றார்கள்.

இருக்கும் இடத்தில்
இந்த நொடியில்
மகிழ்ச்சியாக இரு..
உன்னை சுற்றி
இருப்பவர்களையும்
மகிழ்ச்சியாக வைத்திரு
இதுவே வாழ்க்கை.

தோல்விகளை கண்டு
அஞ்சாதவனை வெற்றி
துரதிக் கொண்டே வரும்.