இந்த பதிவில் “பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்” காணலாம்.
- பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
- Proverbs Tamil and English
பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
1.கும்பலில் அறிவுரை ஒருபோதும் கூறாதே.
Never give advice in a crowd.
2. முதுமை எண்ணுகிறது இளமை துணிகிறது.
Age considers youth ventures.
3. முதுமை துன்பம் தரும் சக பயணி.
Age is a sorry travelling companion.
4. முதியோர் வாக்கு பொய்ப்பது அரிது.
An old mans sayings are seldom untrue.
5. நன்கு வாழ்பவன் நெடிது வாழ்வான்.. இளமையில் திருந்தாதவன் முதுமையில் தள்ளாடுவான்.
He lives long that lives well he that corrects not youth controls not age.
6. குறுகிய மனித வாழ்வில் காலத்தை வீணாக்காதே.
In the short life of man no lost time can be afforded.
7. முதுமை பக்குவத்தின் அடையாளம்.
Age is a symbol of maturity.
8. நன்மையாக முடிபவை யாவும் நன்றே.
All is well that ends well.
9. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
All that glitters is not gold.
10. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
All his geese are swans.
11. பொதுச் சொத்து யாரையும் சேராது.
The property of all is a property of none.
12. இக்கரைக்கு அக்கரை பச்சை.
Things are not always what they seem.
13. கண்ணால் காண்பதே கைக்கு கிடைக்கும்.
What you see is what you get.
14. கோயிலுக்கு போகின்றவன் எல்லாம் பக்தன் அல்ல.
All are not saints who go to church.
15. நிறைகுடம் தளும்பாது.
Still waters run deep.
Proverbs Tamil and English
16. கூலியில்லா வேலை கொடுந் தண்டனை.
service without reward is punishment.
17. உடனே கொடுத்தவன் இருமடங்கு கொடுத்தவனாவான்.
He gives twice who gives quickly.
18. பெறுவதினும் கொடுத்தல் நன்றே.
It is more blessed to give than to receive.
19. மற்றவர்களுக்கு கொடுப்பவன் தனக்கு தானே கொடுத்துக் கொள்கிறான்.
He who gives to another bestows on himself.
20. அழுகின பழங்களில் அதிகம் பொறுக்க முடியாது.
There is small choice in rotten apples.
21. முகம் சுளிக்கும் வாதமே மோசமான உரையாடல்.
Argument is the worst sort of conversation.
22. செத்த பாம்பை அடிக்கும் வீரம் வாய் வீரம்.
To flog a dead horse.
23. கேட்கத் தயங்கி எதையும் இழக்காதே.
Lose nothing for want of ask.
24. வாழ்வு சிறிது வளர்கலை பெரிது.
Life is short but art is long.
25. கொஞ்சம் பெற அதிகம் கேள்.
Ask much to have a little.
26. வழி தவறுவதே விட.. வழி கேட்பதே மேல்.
Better to ask the way than go astray.
27. கேள் கொடுக்கப்படும் தட்டு திறக்கப்படும்.
Ask and it will be given to you.
28. ஆர்வம் உடையோரே ஆர்வத்தை தூண்ட முடியும்.
Aspiring people are inspiring people.
29. நாம் எதற்கு ஆர்வம் கொள்வோமோ அதாகவே ஆவோம்.
The thing we long for that we are.
30. தங்கப்பொதி சுமந்தாலும் கழுதை.. கழுதை தான்.
An ass is an ass though laden with gold.
31. பலருக்கு சொந்தமான கழுதை ஓநாய்களுக்கு இரையாகும்.
The ass of many owners is eaten by wolves.
32. அதிகம் கத்தும் கழுதை அதிகம் தின்னாது.
The ass that brays most eats less.
33. தங்கப் பொதி சுமந்த கழுதை தடையின்றி உப்பரிகை ஏறும்.
An ass loaded with gold climbs the top of castle.
மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..