இந்த பதிவில் “குழந்தைகள் தினம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
எதிர்கால தேசத்தை ஆளவிருக்கும் இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும் புதுமையான ஆற்றல் உடையவர்களாகவும் வளர வேண்டும்.
குழந்தைகள் தினம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- குழந்தை பருவம்
- வருங்கால இந்தியா
- குழந்தைகளின் உரிமைகள்
- குறிக்கோள்கள்
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அதீத அன்பு உடையவராக இருந்தமையால் அவரது பிறந்த தினமான நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.
இவரது பிறந்த தினத்தை இந்திய அரசு குழந்தைகள் தினமாக அங்கீகரித்துள்ளது. வருங்கால இந்தியாவின் சொத்துக்களான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கமுடையதாக இத்தினம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது இக்கட்டுரையில் குழந்தைகள் தினம் பற்றி காண்போம்.
குழந்தை பருவம்
குழந்தைகள் எமக்கு நிறைய கற்றுதருவார்கள் ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவனே வாழ்கிறான் என்பது போல அந்த மழலைகளின் உலகம் மனிதர்களின் மன காயங்களுக்கு மருந்திடும்.
குழந்தை பருவத்தில் குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்தால் தான் அவர்களது எதிர்காலம் சிறப்பானதாய் அமையும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த குழந்தை பருவத்தில் குழந்தைகள் தமது சூழலில் இருந்து நிறைய கற்று கொள்ளுவார்கள் அவை நல்ல சாதகமான விடயங்களாக இருக்க வேண்டும்.
வருங்கால இந்தியா
அந்நியர்களது ஆதிக்கத்தில் இருந்து போராடி வெற்றி பெற்ற இந்திய தேசமானது சுதந்திரமடைந்த வேளையில் பாரத பிரதமர் நேரு அவர்கள் தனது கனவு இந்தியா குழந்தைகளின் கையிலே தங்கியிருக்கிறது என்பதை நன்கறிந்து அவர்களோடு நேரம் செலவிடுவதில் அதிக விருப்பம் காட்டினார்.
அவரை போலவே கனவுகளின் நாயகன் அப்துல்கலாம் அவர்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார். இத்தகைய தலைவர்கள் அனைவருமே வருங்கால இந்தியா குழந்தைகளால் அமையும் என கனவு கண்டனர்.
குழந்தைகளின் உரிமைகள்
இந்தியாவை பொறுத்தவரையில் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பலவகையான சட்டங்கள் காணப்படுகின்றன. இவை அதிகம் குழந்தை உரிமைகள் எனும் பெயரில் அறியப்படுகின்றது.
பாதுகாப்பான வாழ்விடம், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், விரும்பியவாறு கல்வி கற்கும் உரிமை, மகிழ்ச்சியாக விளையாடும் உரிமை என பல உரிமைகளும் சட்டங்களும் சட்டரீதியாக நடைமுறையில் உள்ளன.
இவற்றை கடைப்பிடிக்காத பெற்றோர்களை கூட தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்பது சிறப்பான விடயமாகும்.
குறிக்கோள்கள்
எதிர்கால தேசத்தை ஆளவிருக்கும் இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும் புதுமையான ஆற்றல் உடையவர்களாகவும் வளர வேண்டும்.
இந்திய அரசாங்கம் குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதன் மூலமாக சில குறிக்கோள்களை அடைந்து கொள்ள முயல்கின்றது.
குழந்தைகளின் முக்கியத்துவத்தையும் அவர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பலமான ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் தமது குறிக்கோளில் உறுதியாக இருக்கின்றனர் இவற்றுக்கு பெற்றோர்களும் வலு சேர்க்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.
முடிவுரை
இந்த குழந்தைகள் தினத்தையொட்டி நாடெங்கும் விழாக்கோலமாக குழந்தைகள் கல்வி நிலையங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஒரு தேசத்தின் சொத்து களஞ்சியங்களில் இல்லை அவை பள்ளிக்கூடங்களில் உள்ளது.
எனவே நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளது பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதன் மூலமாக நாட்டை சிறப்பானதாக கட்டியெழுப்ப முடியும்.
You May Also Like: |
---|
மகளிர் தினம் கட்டுரை |
பெண்கள் பாதுகாப்பு கட்டுரை |