இந்த தொகுப்பு “ஓஷோ பொன்மொழிகள் ( Osho Ponmoligal in Tamil )” பற்றியது.
- ஓஷோ பொன்மொழிகள் – Osho Ponmoligal
- ஓஷோ பொன்மொழிகள்
- Osho Ponmoligal
- osho ponmoligal in tamil
ஓஷோ பொன்மொழிகள் ( Osho Ponmoligal in Tamil )
வாழ்வை பற்றி எதையும்
தீர்மானிக்காதே..
உன் தீர்மானமே தடையாகும்..!
வாழ்க்கையின் முடிவுகளை
பிறரிடம் விடாதே.. முடிவு
உன்னுடையதாக
இருக்கட்டும்..!
நீயே தான் உன்னுடைய
துயரங்கள் அனைத்திற்கும்
காரணம் என்று
தெரிந்து கொள்ளும்
அதே கணம் எல்லாமே
மாறிப்போகின்றன..!
விஞ்ஞானம்., கவித்துவம்.,
விழிப்புணர்வு., ஆகிய
மூன்றும் கொண்ட மனிதனே
உலகின் நம்பிக்கை நட்சத்திரம்..!
இதுவரை நடந்து முடிந்தவைகளை
எல்லாம் சேர்த்து வைக்காமல்
அழித்து விடுவதே மிகப்
பெரிய துணிவாகும்..!
அறிந்ததை விட்டு விட்டு
அறியாத ஒன்றினுள்
செல்வது தான் தைரியம்
என்பதாகும்..!
வாழ்நாள் முழுவதும் நீங்கள்
கொடுக்கும் வாக்கை
காப்பாற்ற முடியாது..
வாக்குறுதி கொடுப்பதை
நிறுத்துங்கள்..!
மனமற்ற நிலையில் தான்
விழிப்புணர்வு உதயமாகும்..
எழுச்சி மிகுந்தவர்களாகவும்
இருப்பீர்கள்..!
நீ தந்திரசாலியாக
இருப்பதை விட புத்திசாலியாக
இருப்பது சிறந்தது..!
வாழும் கலை தான்
சாகும் கலை ஆகும்..
எனவே வாழ்ந்து பார்..!
வாழ்க்கையை மிகவும்
வேடிக்கையாக எடுத்துக்கொள்..
அது உனக்கு அளிக்கப்பட்ட
வெகுமதி..!
நாம் செய்ய வேண்டிய
ஒரே காரியம் எதைச்
செய்தாலும் விழிப்புடன்
உஷாராகச் செய்ய
வேண்டும் என்பதே..!
ஒருவன் எந்த ஆசைகளும்
இல்லாத நிலையில்
இருப்பான் என்றால்..
அவன் எல்லாவற்றையும்
சாதித்தவன் ஆகின்றான்..!
கேள்விகளில் மிகச் சிறந்த
கேள்வி எதுவென்றால்..
“நான் யார்” என்ற கேள்வியே..!
எளிமை என்பது நீ நீயாக
இருப்பது.. உன்னையே
முழுமையாக நீ ஏற்றுக் கொள்வது..!
இயற்கையை எதிர்த்து
வெற்றி என்பது
எதுவுமில்லை..!
மனம் அனுபவப்பட முடியாது..
இதயம் மட்டுமே
அனுபவப்பட முடியும்..!
உண்மையை தேட வேண்டும்..
அதற்காக உழைக்க வேண்டும்..
ஆனால் நம்பிக்கைக்கு எதுவும்
தேவையில்லை..
நீ வெறுமனே நம்பலாம்..!
மனிதனிடம் தியானம்
இல்லை என்றால் அவனிடம்
ஒளி இருக்காது.. அவன்
இருளாகவே இருப்பான்..!
அன்பும் மௌனமும் இசைந்த
வாழ்க்கை உண்மையிலே
மிகவும் வளமான
வாழ்வாக இருக்கும்..!
தான் சிறந்த மனிதன் என்று
யாருக்கும் நிரூபிக்க
ஆசைப்படாத மனிதன்
எவனோ அவனே உண்மையில்
சிறந்த மனிதன்..!
நம்பிக்கை உணர்வினால்
மட்டுமே வாழ்க்கை மலர்கிறது..
வாழ்வு ஒரு பிராத்தனை ஆகின்றது..!
நட்புணர்வுக்கு எல்லையே இல்லை..
அது ஒரு உறவு முறை அல்ல..
அது உன்னுடைய
இயல்பு.. குணம்.. தன்மை..!
யாரவது ஒருவரை பிடித்து
வைத்துக் கொள்வது அவரை
நேசிப்பதற்கான எல்லா
வாய்ப்புக்களையும்
அழித்து விடும்..!
முழுமையாக விழிப்புணர்வோடு
வாழும் வாழ்க்கை
இறைமை தன்மை
கொண்ட வாழ்வாகிறது..!
மகிழ்வாக இருப்பது என்பது
சென்றடைய வேண்டிய
குறிக்கோள் அல்ல.. அது
உன்னுடைய இயல்பு..!
மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க…