இந்த உறவுகளின் ஏமாற்றம் கவிதை தொகுப்பைக் கொண்டது. இந்த உலகில் நாம் பழகும் பல உறவுகள் போலியானவர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உறவுகளின் ஏமாற்றம் கவிதை
ஒரு போலியான உறவு என்பது
மாறு வேடத்திலுள்ள எதிரி.
கடவுள் உங்களுக்கு ஒரு அழகான
முகத்தை கொடுத்திருக்கிறார் நீங்கள்
ஏன் இன்னொரு முகத்தை
உண்டாக்குகிறீர்கள்.
போலி உறவுகளுக்கு நீங்கள்
பிளாஸ்டிக் போல.. பயன்படுத்தி
முடித்தால் குப்பைத் தொட்டியில்
வீசி விடுவார்கள்.
வார்த்தைகளால் வர்ணம் பூசி
அலங்கரித்து போலி அன்பு காட்டும்
சில உறவுகளும் உண்டு.
உரிமையோடு உண்மை அன்பு
காட்டும் சில உறவுகளும் உண்டு.
இருக்கும் போது புரிந்து கொண்டு
அன்பு காட்டாத எந்த உறவும் இறந்த
பின் அழுது நடிப்பதில் எந்த
பயனும் இல்லை.
பணம் உலகத்தையும் பல
உறவுகளையும் திரும்ப
பார்க்க வைக்கின்றது. (உறவுகளின் ஏமாற்றம் கவிதை)
வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சியாக இருக்க
வேண்டுமானால் எந்த உறவிடம்
இருந்தும் எதையும்
எதிர் பார்க்காதீர்கள்.
போலி மனிதர்கள் தங்களைப்
பற்றி மட்டும் தான் அக்கறை
காட்டுகிறார்கள் எனவே
கவனமாக இருங்கள்.
போலி உறவுகள்
பெரும்பாலும் பேசுவதை
எல்லாம் செய்வதில்லை.
ஒரு போதும் யாரையும்
நம்பாதீர்கள் ஏனென்றால்
அவர்கள் எப்போது உங்களை
ஏமாற்றுவார்கள் என்று
உங்களுக்கு தெரியாது.
உங்கள் கவலைகளையும்
பலவீனங்களையும் மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
ஏனென்றால் அவற்றை
உங்களுக்கு எதிராக எப்போது
பயன்படுத்துவார்கள்
என்று தெரியாது.
உண்மையானவர்கள் யார்.
போலியானவர்கள் யார்
என்பதை காலம் உங்களுக்கு
புரிய வைக்கும்.
உங்களிடமிருந்து எதாவது
தேவைப்படும் போது உங்களைத்
தேடி வரும் உறவுகளிடம் இருந்து
தள்ளியே இருங்கள் அது தான்
உங்கள் வாழ்விற்குநல்லது.
பழகிய மிருகங்களிடம்
இருக்கும் நம்பிக்கையும்
உண்மையும் சில மனிதர்களிடம்
இருப்பதில்லை.
உலகில் பல போலி மனிதர்கள்
இருப்பதனால் மற்றவர்களுடன்
பழகும் போது அவதானமாக
இருங்கள். (உறவுகளின் ஏமாற்றம் கவிதை)
போலி உறவுகள் என்றும்
உங்கள் வளர்சியைக் கண்டு
பொறாமை கொள்வார்கள்.
அவர்களிடம் அவதானமாக
இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
போலி காதலில் அன்பு என்பது
வெறும் வார்த்தையில்
மட்டுமே இருக்கும்.
ஒருவரின் உணர்வுகளோடு
விளையாடுபவர்கள்
மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.
எந்த உறவும் கடைசி வரை
நிலைக்காது என்ற புரிதல் வந்த
பிறகு தான் ஒருவருக்கு
வாழ்க்கையின் புரிதல் கிடைக்கும்.
எல்லாப் பக்கமும் உறவுகள்
கசக்கும் போது மனதிற்கு
பிடித்தவரிடம் தான் மனம்
தேடி வருகின்றது. அந்த உறவும்
புரிந்துகொள்ளாமல் வதைக்கும்
போது வாழ்க்கை
வெறுத்து தான் போகின்றது.
இவ்வளவு விட்டுக் கொடுத்ததும்
புரிந்து கொள்ளவில்லை எனும் போது
தான் அந்த உறவுகளுக்கிடையே
பிரிவு வருகின்றது.
எதிரியைக் கூட நம்பு ஆனால்
உறவுகளை நம்பாதே காரணம்
எதிரி கொடுக்கும் வலியை விட
உறவுகள் கொடுக்கும் வலியே
கொடுமையானது.
என்ன தான் உரிமையென்று
நினைத்துப் பழகினாலும் சில
நேரங்களில் நீ யாரோ நான் யாரோ
என்று உணர வைத்து விடுகிறார்கள்.
சில உறவுகள். (உறவுகளின் ஏமாற்றம் கவிதை)
சில குற்றங்களை மன்னிப்பதாலும்
பல குறைகளை மறப்பதாலும் தான்
இன்னும் உறவுகள் வாழ்கின்றன.
மேலும்