இந்த பதிவில் “மதம் பற்றிய பொன்மொழிகள்” காணலாம்.
உலகில் பல மதங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் இருந்து வருகின்றன. மதம் என்பது மனிதனை நல்வழி படுத்துபவையாக இருக்க வேண்டும்.
- மதம் பற்றிய பொன்மொழிகள்
- Matham Quotes In Tamil
மதம் பற்றிய பொன்மொழிகள்
1.பணப்பிரச்சனை என்றால் எல்லோரும்
ஒரே மதத்தினர் தான்.
2. குழந்தை பிறந்து வளர்ந்து
அறிவு வளர்ச்சி அடைவதற்குள்..
அவர்கள் மனதில் மதம் என்ற
நஞ்சை புகுத்தி விடுகிறான்
மதவெறியன்.!
3. மனிதன் தன் மனதில் எழும்
கேள்விகளுக்கு தனக்குத்தானே
பதில் அளிக்க கூடிய பயிற்சியை
பெற வேண்டும்.. வேத நூல்களை
படிப்பதனால் தன்னை காப்பாற்றி
கொள்ள முடியாது.!
4. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு
கடவுளை உற்பத்தி செய்து
வைத்திருக்கிறது..
உற்பத்தி செய்தவனின்
குணாதிசியங்களையே
அந்த கடவுளும் பெற்றிருக்கின்றன..
எதையெதை நேசிக்கிறானோ
வெறுக்கிறானோ அவைகளையே
அந்த கடவுளும் நேசிக்கும் வெறுக்கும்.!
5. சின்னச் சின்ன வேறுபாடுகள்
இருப்பினும் கூட உலகின்
அனைத்து மதங்களுமே
முன்வைப்பது இது தான்
“சத்தியத்தை தவிர வேறு
எதுவும் நிலைப்பதில்லை”.
6. எல்லா மதங்களுக்கும்
பொதுவானது அகிம்சை.
7. இறுதியில் ஒரு இடத்தில்
சந்திக்கும் பல சாலைகள்
போலவே மதங்கள்..
ஆனால் எந்த சாலையில்
பயணிக்கிறோம் என்பதே
இங்கு பலருக்கும் பிரச்சனையாக
இருக்கிறது.
8. சேவையின் மூலமே ஆண்டவனை
அடைய முடியும்..
ஆகையால் பிறருக்கு செய்யும்
சேவையே சிறந்த மதம்.
9. ஒரு மதத்தில் இருந்து கொண்டு
இன்னொரு மதத்தை
கேவலமாக பேசும்
ஒருவனை விட அயோக்கியன்
எவனும் இல்லை.
10. நான் ஜாதி, மதம், இனத்தால்
வேறு என்று சொல்லாதீர்கள்..
ஏனென்றால் இவை மனிதர்களை
பிரிக்கும் கருவிகள்.
11. முதலில் உன்னை நீ முழுமையாக
நம்ப வேண்டும்..
அப்பொழுது தான் உன்னால்
கடவுளை நம்ப முடியும்.
Matham Quotes In Tamil
12. பிறருக்கு நன்மைகளை செய்வதற்கு
எந்த அளவிற்கு முன் வருகின்றோமோ
அந்த அளவிற்கு நம் மனம்
தூய்மை அடையும்..
தூய்மையான இதயத்தை தான்
இறைவன் விரும்புவார்.
13. வாழ்வதற்கு தேவை
மதமும் தியானமும் அல்ல
அன்பு தான்.
14. நம்பிக்கை தீய குணங்களில்
இருந்து வெளிவர உதவுகிறது.
15. மனித ஒற்றுமைக்கும் அமைதிக்கும்
அன்பு எனும் சாவி அவசியம்.
16. மதமோ சாதியோ வந்துதான்
மனிதனை அடையாளம்
காட்டவேண்டும் என்றால்..
அதற்கு அவன் பிறக்காமலே
இருக்கலாம்.
17. மதத்தை சார்ந்தது அல்ல பக்தி..
மாசற்ற மனதை சார்ந்ததே பக்தி.
18. மதம், ஜாதி மற்றும் மது
இம்மூன்றும் பல அழிவுகளுக்கு
காரணங்களாக அமைகிறது.
19. நம் மதங்களும் மார்க்கங்களும்
வெவ்வேறாக இருந்தாலும்
அவை போதிக்கும் விடயம்
பிற உயிர்களிடத்தில்
அன்பு காட்டுதலே.!
20. பூமியிலுள்ள மதங்கள்
அனைத்தும் குருட்டு நம்பிக்கை
என்கின்ற நிலத்தின் மீதே
கட்டப்பட்டுள்ளன.
21. எல்லா மதங்களுக்கும் நோக்கம்
ஒன்றுதான் விளக்க முடியாததை
ஏற்றுக்கொள்ள செய்வதே
அந்த நோக்கம்.
22. எங்கு அறிவு முடிவடைகிறதோ
அங்கு மதம் தொடங்குகிறது.
மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..
ஊக்கம் தரும் வரிகள்: Tamil Motivational Quotes