நூலகம் பற்றிய பொன்மொழிகள்

Quotes About Library In Tamil

இந்த பதிவில் “நூலகம் பற்றிய பொன்மொழிகள்” காணலாம்.

  • நூலகம் பற்றிய பொன்மொழிகள்
  • Quotes About Library In Tamil

நூலகம் பற்றிய பொன்மொழிகள்

1.எந்த வீட்டில் நூல்நிலையம்
இருக்கிறதோ அந்த வீட்டில்தான்
ஒளிவிளக்கு இருக்கிறது.

2. ஒரு நூலகத்தையும் ஒரு தோட்டத்தையும்
வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும்
தேவையில்லை.

3. நூலகங்கள் திறமை
இல்லாதவர்களை கூட..
திறமைசாலிகளாக மாற்றி விடும்.

4. நூலகம் ஒரு மாயக்கூடம்
அங்கு பலவகை ஆவிகள்
உலவுகின்றன.

5. ஒரு புத்தகத்தை எழுத நீங்கள்
பாதி நூலகத்தை
படிக்க வேண்டும்.

6. பல நூற்றாண்டின் அறிஞர்கள்
அனைவரும் கூடியிருக்கும்
மாளிகைதான் நூலகம்..
இனிவரும் அறிஞர்களுக்காக
அந்த மாளிகையின் கதவுகள்
திறந்தே இருக்கின்றன.

7. உயர்ந்த சிந்தனைகளை நமது
முன்னோர்கள் பரம்பரையாக
சேமித்த கருவூலகங்கள் தான்
புத்தகங்கள்..
அவைகள் நமக்கு
காலக்கண்ணாடியாக காட்சியளிக்கும்.

8. பழங்காலத்திய பெரும்
சிந்தனையாளர்களை நேரில் தரிசித்து
அவர்களுடன் உரையாட வேண்டுமா..?
நூலகத்திற்கு போ.

9. நூலகம் எனும் நண்பன் இருந்தால்
அறிவு.. ஆற்றல்.. பண்பு..
இவையெல்லாம் சிறக்கும்.
படைக்கும் ஆற்றல்,
படிக்கும் ஆற்றல் பெருகும்.

10. நூலகத்தின் படியேறி உள்ளே
சென்று கற்றால்.. இவ்வுலகும்
உன்னிடத்தில் தோற்கும்.

11. நூலகம் என்பது நண்பன் மட்டுமல்ல
காதலும் கூட.. அதனால் தான்
யார் வந்தாலும் மௌனத்துடன்
கண்களால் பேசுகிறார்கள்.

12. பெண் கையை பிடித்து கண்ட
இடம் சுற்றாமல்..
நூலகத்தின் கையை பிடித்து
உள்ளே சென்றால் காணாத
உலகத்தையும் காண முடியும்.

13. நீங்கள் மனசோர்விலும்,
மன அழுத்தத்திலும் இருக்கும் போது..
நூலகத்திற்கு சென்றால்
நீங்கள் மனஅமைதியையும்,
மன தெளிவையும் பெற முடியும்.

Quotes About Library In Tamil

14. உலகில் சாகாவரம் பெற்றவை
என்று ஒன்றைத்தான்
சொல்ல முடியும்..
அவை புத்தகங்களே.!

15. நல்ல அறிவுரைகளை சொல்வதில்
பெற்றோருக்கும் மேலாக
உயர்ந்து நின்கின்றன நூலகங்கள்.

16. கவர்ந்து இழுப்பதில் காதலியை போல்
காத்திருக்கின்றன நூலகங்கள்.

17. நூலகங்கள் உலகின்
இரண்டாம் உலகம்.

18. நல்லவர்களையும், வல்லவர்களையும்
போற்றும் இடம் நூலகம்,
மறைந்த மாமனிதர்களையும்
நினைவூட்டும் இடம் நூலகம்.

19. ஜாதி மதம் பார்க்காமல் அனைவரும்
சமத்துவமாய் கூடும் இடம் நூலகம்.

20. நூலகத்தில் சரிந்தே கிடக்கிறது
புத்தகங்கள்..
எப்பொழுதும் வாழ்க்கையின்
நிமிர்ந்து நின்றவர்களின் வரலாறு.

21. உலகத்தில் தனித்து இருக்க வேண்டும்
என்று உன்னிடம் வந்தேன்..
ஆனால் உலகமே உலகமே
இங்குதான் இருக்கு என
புரிந்து கொண்டேன் நூலகம்
எனும் வடிவில்.

22. ஆயிரமாயிரம் பொக்கிஷங்கள்
உள்ளே இருந்தாலும் மூடிக்கொண்டு
அமைதியாக தான் இருக்கின்றது
நூலகங்கள்.

23. ஒரு கோடி ரூபாய் கிடைத்தால்
என்ன செய்வீர்கள் என்று
கேட்ட போது
“நூலகம் கட்டுவேன்”
என்கிறார் காந்தி.

24. அன்று எது தேவையெனும்
தேடினோம் நூலகத்தை..
இன்று எது தேவையெனினும்
தேடுகிறோம் வலைதளத்தை.

25. அறிவை பெருக்கும் கருவிகள்
நூலகங்களில் தான் அதிகம்
நிறைந்திருக்கின்றன.!

26. நல்ல புத்தகமே சிறந்த நண்பன்..
உதவி தேவையான போதெல்லாம்
நண்பர்களை நாடிச் செல்வது போல..
துணை வேண்டும் போதெல்லாம்
நூலகங்களை நாடிச் செல்ல வேண்டும்.

மேலும் பதிவுகளை படியுங்கள்..

கல்வி கவிதைகள் வரிகள்

புத்தகம் பற்றிய பொன்மொழிகள்

கல்வி பற்றிய பொன்மொழிகள்