இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

Indraya Samuthayathil Pengalin Pangu In Tamil Katturai

இந்த பதிவில் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை பதிவை காணலாம்.

“மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” இந்த வரிகள் போதும் பெண்களின் சிறப்பினை உணர்த்துவதற்கு.

இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்களின் வளர்ச்சி இருக்கின்றது.

  • இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு
  • Indraya Samuthayathil Pengalin Pangu
பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மனிதவாழ்வில் பெண்களின் முக்கியத்துவம்
  3. சமூக கட்டமைப்பில் பெண்கள்
  4. குடும்ப கட்டமைப்பில் பெண்கள்
  5. தொழில் துறைகளில் பெண்கள்
  6. முடிவுரை

முன்னுரை

பெண் என்பவள் யார்? மேன்மையானவள், அழகானவள், அடக்கமானவள் என்றெல்லாம் கவிஞர்கள் வர்ணித்து கொள்வார்கள். ஆனால் பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள் இவள் தான் பெண்.

முன்பொரு காலத்தில் பெண் ஆணை சார்ந்து வாழ்ந்தாள். இதனால் பெண்ணுக்கென பல விதிமுறைகள், அடக்கு முறைகள் இருந்து வந்தன. ஆனால் இன்றைக்கு அந்த விம்பம் உடைந்திருக்கிறது.

பெண்கள் தைரியமாக இன்றைக்கு பல வழிகளிலும் இச்சமுதாயத்தை வழிநடத்தி செல்கின்றனர். ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தியல் இன்றைக்கு சமூகத்தில் வலுத்திருக்கிறது.

பெண் இல்லாது ஆண்களால் இந்த சமூகத்தில் தனித்தியங்க முடியாது என்பது வெளிப்படை உண்மை. இந்த சமூகத்தை இவ்வுலகில் உயிர்களை சிருஸ்டித்து அவற்றை பாதுகாத்து வாழ்விக்கும் பெண்ணின் அர்ப்பணிப்பு அளப்பெரியதாகும்.

இக்கட்டுரையில் பெண்களின் முக்கியத்துவம், சமூக கட்டமைப்பில் பெண்கள், குடும்ப கட்டமைப்பில் பெண்கள் மற்றும் தொழில் துறைகளில் பெண்கள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

மனிதவாழ்வில் பெண்களின் முக்கியத்துவம்

“மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்று பாடுகிறார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அந்தளவிற்கு மனித வாழ்க்கையில் பெண்களின் முக்கியத்துவம் அளப்பரியது.

நமது தமிழ் சமூகம் பெண்ணை போற்றி வாழ்ந்த சமூகமாகும். ஆரம்பகாலங்களில் பெண்ணை தெய்வமாகவும் சக்தியாகவும் போற்றினர்.

பெண்ணின் அன்பிலும் அரவணைப்பிலும் தான் இவ்வுலகம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது. ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்து அக்குழந்தையை இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக ஆளாக்குவதில் பெண்ணின் பங்கு தனித்துவமானது.

ஆண் என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் அவனை அரவணைத்து வழிநடத்தி அவன் வெற்றியின் பின்னால் இருப்பது ஒரு பெண் தான்.

ஒரு தாய் இல்லாத குழந்தையின் வாழ்க்கை பொலிவிழந்து காணப்படும். எல்லா உயிர்களுக்கும் பெண்மையே தாய்மை உருக்கொண்டு வாழ்வழிக்கிறது.

அது போக குடும்ப பணிகள் வீட்டு பணிகள் எல்லாவற்றையும் ஆற்றி தானும் தன்னுடைய தொழிலை ஆற்றி வாழ்க்கையை நடாத்தும் பெண்கள் வலிமையுடையவர்களே.

சமூக கட்டமைப்பில் பெண்கள்

எமது சமூகங்கள் குடும்பங்களை அடிப்படையாக கொண்டு கட்டியமைக்கப்படுகிறது. அந்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் பெண்ணை அடிப்படையாக கொண்டு கட்டியமைக்கப்படுகிறது.

“பெண்ணை பூமிக்கு ஒப்பிடுவார்கள்” அதாவது வரும் பிரச்சனைகளை பொறுமையாக தாங்கி கொண்டு தனது குடும்பத்தை முன்னேற்றி செல்வதில் பெண்கள் வல்லவர்கள். இன்றைக்கும் சில குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக உள்ளன.

குடும்பங்களில் தாயாகவும் சகோதரிகளாகவும் குடும்பங்களை அழகாக்கும் பெண்கள் தொழில் ரீதீயாகவும் இச்சமூகத்தை தீர்மானிக்கின்றனர்.

கல்வி சொல்லி தரும் நல்ல ஆசிரியைகளாக வைத்தியர்களாக தாதியர்களாக அலுவலகர்களாக என பல துறைகளிலும் பெண்கள் நமது சமூகத்தை கட்டமைத்து வருகின்றனர்.

பெண்கள் இயற்கையாகவே மனவலிமை மிக்கவர்களாவர். இதனால் ஆண்களால் செய்ய முடியாத வேலைகளை கூட இலகுவாக செய்து விடுகின்றனர். எப்போதும் ஆண்களுக்கு உந்துதல் ஆக பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.

குடும்ப கட்டமைப்பில் பெண்கள்

பொதுவாக நமது சமூகத்தில் குடும்பங்களில் ஆண் வேலைக்கு சென்று உழைப்பதும் பெண் வீட்டில் இருந்து வீட்டையும் குழந்தைகளையும் சமையல் முதலான வேலைகளையும் பார்த்து கொள்வார்கள்.

அந்த குடும்பத்தின் இயக்கத்தின் அடிப்படையாக மகிழ்ச்சியை உண்டாக்குபவள் பெண் தான் கிடைக்கின்ற வருமானத்தை கொண்டு தனது குடும்பத்தை நடாத்தி செல்வது பெண்கள் தான்

பிள்ளைகளுக்கு சமைத்து உணவழித்து அவர்களை கவனித்து கொள்ளல், பாடசாலைக்கு அனுப்புதல், அவர்களது செயற்பாடுகளில் துணையாக இருத்தல், பெண் பிள்ளைகளையும் ஆண் பிள்ளைகளையும் நல்வழிபடுத்தி வளர்ப்பதில் தந்தையை விட தாயின் பங்கே அதிகமாகும்.

“எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகள் தான் அவர் நல்லவராவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று கூறுவார்கள்.

இவ்வாறு எமது சமூகம் நிலைத்திருக்க இது போன்ற பெண்களின் தியாகமும் அர்பணிப்பும் தேவைப்படுகிறது.

தொழில் துறைகளில் பெண்கள்

இன்றைக்கு பெண்கள் அடக்குமுறைகளை தாண்டி சுதந்திரமாக தமக்கு பிடித்த துறைகளில் கல்வி வழியில் முன்னேறி வருகின்றார்கள்.

இன்றைக்கு கல்வி துறைகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாக சாதித்து வருகின்றனர்.

பெண்கள் இல்லாத தொழில் துறைகளே இல்லை எனும் அளவிற்கு பெண்கள் சமூகத்திற்கு தமது பங்களிப்பை செய்து வருகின்றனர்.

அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், பாராளுமன்றங்கள், விளையாட்டுதுறை, இராணுவத்துறை என பெண்கள் இல்லாத துறைகள் இல்லை எனுமளவுக்கு இன்றைக்கு பெண்களின் பங்கு உயர்வாக உள்ளது.

முடிவுரை

வாழ்வின் எல்லா கட்டங்களிலும் எம்மையும் எமது சமூகத்தையும் தனது பணிகளால் உயர்த்தி கொண்டிருக்கும் பெண்கள் பாதுகாக்க படவேண்டும்.

அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வன்முறைகள் இல்லாமல் சுதந்திரமாக வாழ வழி செய்வோம். இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.

இதனால் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது பெண்கள் சுதந்திரமாக வாழ கூடிய உலகை நாம் உருவாக்குவதன் மூலம் நமது சமுதாயத்தை காப்போம்.

You May Also Like:

எனது கனவு பள்ளி கட்டுரை தமிழ்

உணவே மருந்து கட்டுரை